ஜன நாயகன் மேடையில் அஜித் படம்.. இதுதான் தளபதி மனசு.. ரஜினி மிஸ் பண்ண இடத்தில் ஸ்கோர் செஞ்சுட்டாரு

மலேசியா: தளபதி விஜயின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. முதலில் விஜய் பாடல்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தற்போது இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரஜினியை எல்லாம் கதைக்குள் கொண்டு வந்து இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள்.

ஜன நாயகன் படத்தின் இயக்குநர் ஹெச். வினோத். இவருக்காக படக்குழு தரப்பில் இருந்து உருவாக்கப்பட்ட ஏ.வி வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது ஹெச். வினோத் சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கினார். அதன் பின்னர், தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் இதுவரை ஐந்து படங்கள் வெளிவந்துள்ளது. இந்த ஐந்து படங்களில் மூன்று படங்கள் அஜித் நடித்த படங்கள். அதாவது விஜய்க்கு நேரடி போட்டியாளர்களில் ஒருவரான அஜித்தை இயக்கி உள்ளார்.

அஜித்: ஹெச். வினோத் இயக்கத்தில் கடைசியாக வெளியான துணிவு படம் கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜயின் வாரிசு படத்துடன் போட்டியாக வெளியாகி பெரும் வெற்றியை ஈட்டியது. இப்படி இருக்கும்போது ஹெச். வினோத்துக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வீடியோவில், அவர் இயக்கத்தில் வெளியான படங்களின் பெயர்கள் அனைத்தும் இடம் பெற்றது.

Netizens Appreciates Vijay For Ajith Movie Name Mentioned in Jana Nayagan Audio Launch And Criticize Rajinikanth

ரஜினி: இது தொடர்பான தகவலை பகிரும் விஜய் ரசிகர்கள் விஜயைப் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக இந்த மனசு யாருக்கு வரும் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், ரஜினியின் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு உருவாக்கப்பட்ட ஏ.வி சிறப்பு வீடியோவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விஜயின் மாஸ்டர் மற்றும் லியோ படங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதையும் சுட்டிக் காட்டி இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள். மேலும் சிலர் ரஜினி மிஸ் செய்ததை, விஜய் ஸ்கோர் செய்துவிட்டார் என்றும் விமர்சித்து வருகிறார்கள். சிலர் மீம்ஸ்கள் எல்லாம் பகிர்ந்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X