Marimuthu passed away: அந்த கணீர் குரலை இனி எப்போது கேட்போம்.. கதறும் இணையவாசிகள்!

சென்னை: நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் மறைவு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல் மற்ற சீரியல்களை விட இந்த சீரியலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம்.

Netizens are condoling Marimuthus demise on social media

இந்த சீரியலில் வரும் காட்சிகள், வசனங்கள் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுவதுண்டு. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் மாரிமுத்து.

ஆதி குணசேகரன்: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்து வரும் இவரின் நடிக்கும் விதம், உடல் மொழி, முக பாவனை உள்ளிட்டவைகளால் இவர் அனைவராலும் கணிக்கப்படும் நடிகராக மாறினார். வைரமுத்துவின் உதவியாளராக இந்த இவர், இயக்குநர்கள் வசந்த், ராஜ்கிரண், சீமான், மணிரத்தினம், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயத்குநராக பணியாற்றியுள்ளார்.

மாரடைப்பால் உயிரிழந்தார்: வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து இப்போதுதான் பெயரும் புகழும் குவிந்து வரும் வேலையில் மாரடைப்பு காரணமாக இன்று காலை 8.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

மிகப்பெரிய அதிர்ச்சி: மாரிமுத்துவின் திடீர் மரணம் குறித்து எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் கண்ணீருடன், இதை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. இன்று காலையில் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வருவதாக சொல்லியிருந்தார். இப்படி நடக்கும் என்று யாருமே நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

அந்த கணீர் குரலை எப்போதும் கேட்போம்: மாரிமுத்துவின் திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் இனி மேல் அந்த கணீர் குரலை எப்போதும் கேட்போம், இது திரையுலகிற்கே பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை என அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X