twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பள்ளி மாணவர்கள் முன்பு கொரியன் படங்களை கிண்டலடித்த சிவகார்த்திகேயன்: கிளம்பியது புது சர்ச்சை!

    |

    சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான 'டான்' திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.

    சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் 125 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.

    'டான்' படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சியை பள்ளி மாணவர்கள் முன் பேசிய சிவகார்த்திகேயன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    பொன்னியின் செல்வன் இசை -ட்ரெயிலர் வெளியீட்டு விழா.. எந்த சேனல்ல ஒளிபரப்பாகுது தெரியுமா? பொன்னியின் செல்வன் இசை -ட்ரெயிலர் வெளியீட்டு விழா.. எந்த சேனல்ல ஒளிபரப்பாகுது தெரியுமா?

    பாக்ஸ் ஆபிஸில் இணைந்த டான்

    பாக்ஸ் ஆபிஸில் இணைந்த டான்

    சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'டாக்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றதோடு, 100 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'டான்' திரைப்படம், மேலும் ஒரு சூப்பர் ஹிட்டை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்தது. சிபி சக்கரவர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, காளி வெங்கட், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

    ரசிகர்களை பதம் பார்த்த டான் காமெடி

    ரசிகர்களை பதம் பார்த்த டான் காமெடி

    கல்லூரி கதைக்களத்தில் காதல், ரொமான்ஸ், காமெடி, சென்டிமெண்ட் என பக்கா கமர்சியல் படமாக வெளியானது 'டான்' திரைப்படம். இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன், சூரி இணைந்து நடித்த ஒரு காமெடி சீன், பயங்கர வைரலானது. கல்லூரியில் ப்ரொபசர் கேரக்டரில் நடித்த காளி வெங்கட், முனிஷ்காந்த் முன்னிலையில், தமிழையும், கொரிய மொழியையும் கலந்து சிவாவும் சூரியும் பேசியிருந்தனர். இந்தக் காமெடி சீன் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்ததோடு, புதிய ட்ரெண்ட் செட்டாகவும் அமைந்தது.

    பள்ளிவிழாவில் சிவகார்த்திகேயன் பேசிய டயலாக்

    பள்ளிவிழாவில் சிவகார்த்திகேயன் பேசிய டயலாக்

    டான் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த காமெடி சீனுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்த நிலையில், இப்போது அதுவே சர்ச்சையாகியுள்ளது. பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'டான்' படத்தில் இடம்பெற்ற 'தங்கொரியன்' காமெடி சீன் டயலாக்கை பேசி மாணவர்களை சிரிக்க வைத்தார். மேலும், கொரிய படங்கள் குறித்தும் கமெண்ட் அடித்து விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்கள் விமர்சனம்

    சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்கள் விமர்சனம்

    பள்ளி விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், கொரிய திரைப்படங்கள் பற்றியும் அதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்தும் பேசினார். அதாவது, "நமக்கு தெரிஞ்ச கொரிய பாஷை என்பது 'இதாக்கோ அனுப்ச்சான்.' நான் எப்போ கொரியன் படம் பார்த்தாலும் அதுல நடிக்குற எல்லாரும் ஒரே மாதிரி தான் இருக்காங்க. எது ஹீரோ எது ஹீரோயின்னு தெரியாமலயே நான் படம் பாத்துருக்கேன்" எனக் கூறியுள்ளார். இதனை விமர்சித்துள்ள நெட்டிசன்கள், பள்ளி மாணவர்கள் முன்பு இப்படி கொரிய திரைப்படங்களையும் அந்நாட்டு கலைஞர்களையும் கிண்டலடிக்க வேண்டிய அவசியம் என்னவென்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தகது.

    English summary
    Sivakarthyan starrer 'Prince' movie will release soon. In this case, Sivakarthikeyan recently attended a school function and spoke in front of the students. At that time, he made fun of Korean films and the artists acting in them, which caused controversy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X