ஓவர் ஆட்டிட்யூட் காட்டும் அசீம்... கமலுக்கு எதிராக சர்ச்சை கருத்து... பிக் பாஸ் டைட்டிலுக்கு ஆப்பு?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் டைட்டில் வின்னராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
21 போட்டியாளர்களுடன் கடந்தாண்டு அக்டோபரில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, ஜனவரி 22ம் தேதி முடிவுக்கு வந்தது.
டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டதில் இருந்து விஜய் டிவியின் இந்த முடிவை பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில், யூடியூப் சேனலுக்கு அசீம் கொடுத்த பேட்டியில் கமல்ஹாசன் குறித்து சர்ச்சையாக பேசியது இப்போது அவருக்கே வினையாகியுள்ளது.

சர்ச்சைகளின் நாயகன் அசீம்
2022 அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த மாதம் 22ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன் 6, மொத்தம் 106 நாட்கள் வரை நடைபெற்றது. வாரம் ஒருவர் எவிக்சன் ஆன நிலையில், இறுதிப்போட்டிக்கு கதிர், அமுதவாணன், மைனா நந்தினி, ஷிவின், விக்ரமன், அசீம் ஆகியோர் மட்டுமே தேர்வாகினர். இறுதியாக அசீம், விக்ரமன், ஷிவின் மூவரும் கிராண்ட் பினாலே மேடையில் ஏறினர். அதில் அசீம்க்கும் விக்ரமனுக்கும் பலத்த போட்டி காணப்பட்ட நிலையில், மக்களின் வாக்குகளின் அடிப்படையில் அசீம் தான் டைட்டில் வின்னர் என கமல் அறிவித்தார்.

கமலை தாக்கிய அசீம்
நேர்மையாகவும் கண்ணியமாகவும் விளையாடிய விக்ரமனுக்கு தான் பிக் பாஸ் டைட்டில் கொடுத்திருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், பாய்காட் விஜய் டிவி, அறம் வெல்லும், அபியூசர் அசீம் என பல ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்றவர்கள் தனித்தனியாகவும் குழுவாகவும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர். அப்படி அசீம் பங்கேற்ற ஒரு நேர்காணலில், அவரைப்பற்றிய மீம்கள் போட்டுக் காண்பிக்கப்பட்டன. அதில் ஒன்றில் என் பையன் தான் எல்லாமே என குறிப்பிட்டு, அசீம் அவரது மகனை எந்த அளவு நேசிக்கிறார் என்ற ஒரு மீம் காட்டப்பட்டது.

ஒருமையில் பேசியதாக சர்ச்சை
அசீம் இப்படி பேசியதை குறிப்பிட்டு இதை உங்கள் மகன் பார்த்தால் எப்படி ரியாக்ட் செய்வார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அசீம், "ஏன்டா, என் மகன் கூட நான் நேரம் செலவழிக்க எனக்கு பல ஆயிரம் நாள் இருக்குடா. அந்த ஷோ பார்த்துதான் என் பையன் வளரனும்னு அவசியம் இல்ல" என கோபமாக பேசினார். அசீம் அப்படி பேசியது ஷோவில் அவருக்கு அட்வைஸ் செய்த கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இருப்பதாக சர்ச்சையானது. மேலும், கமல் போன்ற மூத்த நடிகரை இப்படி ஒருமையில் பேசலாமா எனவும் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

பிக் பாஸ் டைட்டிலுக்கு ஆப்பு?
மேலும் அசீம் பேசிய வீடியோ வைரலானதால் அதுகுறித்து அவரே விளக்கம் கொடுத்து ட்வீட் செய்திருந்தார். அதில், "உங்களுடைய நேரத்தை மற்றவர்களுக்கு அன்பு காட்ட செலவிடுங்கள், வெறுப்பை காட்ட வேண்டாம். நான் கமல் சாரை தாக்கி பேசவில்லை, அவர் எனக்கு தந்தை மாதிரி தான், அவருக்கு எனக்கு சொன்ன அறிவுரைகளை நான் ஏற்றுக்கொள்வேன், நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளுங்கள்" என பதிவிட்டிருந்தார். ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்ளாத நெட்டிசன்கள் அசீமிடம் இருந்து பிக் பாஸ் டைட்டிலை திரும்பி வாங்க வேண்டும் என விமர்சித்து வருகின்றனர். இதனால், அசீமிடம் இருந்து பிக் பாஸ் டைட்டில் பறிக்கப்படும் என செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











