சின்மயிக்காக கணவர் செய்த செயல்.. Gen Z தலைமுறையே கொண்டாடுதே.. கொடுத்து வச்ச அம்மணி!

சென்னை: பாடகி சின்மயின் கணவரும், நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன், ராஷ்மிகா மந்தனாவை வைத்து 'The Girlfriend' என்கிற திரைப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நவம்பர் 7ந் தேதி தியேட்டரில் வெளியாக கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் வெற்றிவிழா கலந்து கொண்ட சின்மயின் கணவர் பேசியதை Gen Z தலைமுறையினரும் பாராட்டி வருகின்றனர்.

'The Girlfriend' படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் படத்தின் இயக்குநர் ராகுல் ரவீந்சதிரன் பேசினார். அப்போது, நான் ஒவ்வொரு முறை மேடையில் மேடையில் பேசுவது வீடியோவாக வரும் போது, பலரும் என் வீடியோவை பார்த்துவிட்டு ஏன் ஒரே சட்டையையே வருகிறீர்கள், வேறு சட்டையே இல்லையா என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்வது ஒரே ஒரு விஷயம் தான், சட்டையெல்லாம் நிறைய இருக்கிறது. ஆனால். நான் அணிந்து இருக்கும் இந்த சட்டையில் ஸ்பெஷலான ஒரு விஷயம் இருக்கிறது. ஏனெனில் இது சின்னு என் மனைவி சின்மயி 12, 13 வருடங்களுக்கு முன்பு, அதாவது எங்கள் திருமணத்துக்கு முன், நாங்கள் டேட்டிங் சென்றபோது முதன்முதலாக எனக்கு வாங்கிக் கொடுத்த சட்டை.

Chinmayi instagram
Photo Credit:

பாடகி சின்மயி: இன்று இந்த இடத்திற்கு சின்மயியால் வரமுடியவில்லை என்பதால், இந்த சட்டையை அணிந்து வந்தேன், இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது என்பதால் அணிந்துள்ளேன். இந்த சட்டையை நான் அணியும் போது அவர் என்னுடன் இருப்பது போல நான் உணர்வேன். இந்த வீடியோவை சின்மயி பார்த்தால் நிச்சயம் சந்தோஷப்படுவார் என உணர்ச்சிப் பொங்கக் பேசி இருந்தார். ராகுல் இப்படி பேசியதைப்பார்த்த ராஷ்மிகா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கை தட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் சின்மயிக்கு டேக் செய்து இந்த காலத்து இளசுகளும் அவரை வெகுவாக பாராட்டினார்கள்.

இதற்கு பதில் அளித்துள்ள பாடகி சின்மயி, பெண்கள் அனைவரும் என் கணவர் ராகுல் போல ஒரு கணவர் கிடைப்பதற்கும், வசுமதி அத்தை போல ஒரு மாமியாரை கிடைப்பதற்கும் வாழ்த்துகிறேன். அப்படி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், கல்யாணமே செய்து கொள்ளாமல் தனியாகக்கூட இருங்கள். நிச்சயம் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X