பிரியங்காவால் நாசமாபோன தொகுப்பாளினிகள்.. விஜய் டிவியில் அவர் வைத்தது தான் சட்டம்!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தற்போது தொகுப்பாளினியாக மாறியுள்ள வி.ஜே.மணிமேகலை. அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார். மேலும், குக்காக வந்த ஆங்கர், தனது வேலையில் தலையிடுகிறார். அதனால் வெளியேறுவதாக மறைமுகமாக பிரியங்கா பற்றி பேசியதை அடுத்து, பலரும் தொகுப்பாளினி பிரியாங்காவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக உள்ளது குக் வித் கோமாளி, இதில் புகழ், மணிமேகலை, குரோஷி, தங்கதுரை, மதுரை முத்து , சுனிதா, சிவாங்கி என அனைவரும் அலப்பறை செய்வார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு பட வாய்ப்புகளும் தேடி வந்தன. மக்களின் குறை தீர்க்கும் மருந்தாக இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்ததால் நான்கு சீசன்களும் சிறப்பாக நடந்து முடிந்தது.

CWC 5: குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில், மணிமேகலை, ரக்ஷன் தொகுப்பாளினியாக உள்ளனர். மேலும், விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே இந்த சீசனில் குக்காக உள்ளார். விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சீசனின் தொகுப்பாளினி மணிமேகலை வெளியேறுவதாக அறிக்கை வெளியிட்டார். அதில், 2019ம் ஆண்டில் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என் பயணத்தை தொடங்கினேன். அன்றில் இருந்து இதே நிலை தான் இருக்கிறது.
மூக்கை நுழைத்தார்: என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். குறிப்பாக ஆங்கர்ஸ் பார்ட்டில், அவர் நிகழ்ச்சியின் குக்காக இருக்க வேண்டும், ஆனால் அவர் அதை அடிக்கடி மறந்துவிட்டு என்னை வேலை செய்ய விடாமல் ஆங்கர் வேலையில் நிறைய குறுக்கிடுகிறார் என்று பிரியங்கா குறித்து கூறியிருந்தார்.
தன்மானம் முக்கியம்: இதுகுறித்து, தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், சீசனில் நான் தொகுப்பாளினியாக நுழைந்த நாள் முதலில் இருந்து நேற்று வெளியேறிய நாள் வரை பல பிரச்சனைகளை பார்த்துவிட்டேன். நான் பேசுவதை தாண்டி எனக்கு தான் எல்லாமே தெரியும், நான் இந்த சேனலில் பெரிய தொகுப்பாளினி, நான் இதை பார்த்துக் கொள்கிறேன் என என்னுடைய வேலையில் மூக்கை நுழைத்தார். இதுகுறித்து சேனல் நிர்வாகத்திடம் கூறிய போதும் அவர்கள் என்னை சமாதானப்படுத்தி, அவரிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள், இல்லை என்றால் என் கேரியரே போய்விடும் என்றார்கள். எதுவானாலும் சரி, தன்மானம் தான் முக்கியம் என்று வந்துவிட்டேன் என்று பேசி இருந்தார்.
விஜய் டிவி ஜால்ரா: மணிமேகலையின் வீடியோவை பார்த்த இணையவாசிகள் விஜய் டிவி எப்போதும் இதே வேலையைத்தான் செய்கிறது. கடந்த சீசனில் ஷிவானி இருந்த போதும், மற்றவர்களை வெளியேற்றி பாலிட்டிக்ஸ் செய்தது. அதே போல பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா இருந்த போதும், விஜய் டிவி நிர்வாகம் அவருக்கு ஜால்ரா அடித்தது. அப்போது அடித்த ஜால்ராவை இப்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்கிறது. பாட்டு போட்டி என்றாலும், கேம் ஷோ என்றாலும், சமையல் என்றாலும், அதில் பிரியங்கா தான் பெஸ்ட் என்பது போல காட்டுகிறது.
காணாமல் போன தொகுப்பாளினிகள்: பிரியங்காவால் விஜய் டிவியில் பல தொகுப்பாளினிகள் காணாமல் போய் இருக்கிறார்கள். மணிமேகலை, அனிதா சம்பத், ஃபரினா, நக்ஷத்ரா, ஜாக்குலின்,பவித்ரா என பலர் இருக்கிறார்கள். இவர்கள் காணாமல் போனதற்கு பிரியங்கா தான் காரணம் என்றும், மணிமேகலை சொன்னது போல வாழு வாழவிடு என இணையவாசிகள் பிரியங்காவை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











