தாலி வரம் பாட்ட சுட்டுட்டு.. வித் லவ் படம் வரும்போது கோமாவுல இருந்தியா.. பாடகரை விளாசும் ரசிகர்கள்!
சென்னை: கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள யூத் படத்தில் இடம்பெற்ற கானா பாடல் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கானா பாடகர் தினேஷ் குற்றம்சாட்டி இருந்தார். இது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கும் நிலையில் நெட்டிசன்ஸ் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தற்போது, இவர் யூத் படத்தை இயக்கி அதில், நாயகனாக நடித்துள்ளார். மார்ச் 19ந் தேதி வெளியான இத்திரைப்படம் பள்ளி வாழ்க்கையில் நடக்கும் ரகளை , காதல் , ஏமாற்றம் என நகைச்சுவை எமோஷன் கலந்த படமா உருவாகியுள்ளது. இதில், தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில் படம் நல்ல, இதுவரை உலகளவில் ரூ. 31 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கென் கருணாஸ்: ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், கானா பாடகர் தினேஷ், யூத் படத்தில் இடம்பெற்ற கானா பாடலை கென் கருணாஸ் அனுமதி இன்றி பயன்படுத்திவிட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். அந்த படத்தில் 'நான் ஆசபட்ட பொண்ணு பேரு மோனிஷா' என்கிற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன் இந்த பாடலை டிவோ நிறுவனம் ஆல்பம் பாடலாக வெளியிட்டது. அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதால் நான் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன் என கானா தினேஷ் தெரிவித்துள்ளார். இது இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், இணையவாசிகள் கானா பாடகர் தினேசை கடுமையாக ட்ரோல் செய்து வித் லவ் படத்திலும் இந்த பாடல் வந்தது அப்போ கோமாவில் இருந்தியா என்றும், செலவுக்கு காசு வேணும்னா கேட்டு வாங்கிட்டு போடா கதறாம என்றும் பாடகரை விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











