Atlee: ஒரு படம் எடுக்க எனக்கு பல கதைகள் தேவை.. காப்பி மன்னன் அட்லீயை பங்கமாக கலாய்க்கும் பேன்ஸ்!
சென்னை: (Atlee)இயக்குநர் அட்லீ ஒரு படம் எடுக்க எனக்கு பல கதைகள் தேவைப்படுவதாக கூறி உள்ளதை நெட்டிசன்கள் பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7ந்தேதி திரையரங்குகளில் வெளியான ஜவான் உலக அளவில் ஆயிரம் கோடியை வசூல் செய்துள்ளது.
பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் அட்லீ: ஜவான் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அட்லீ, படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், திரையரங்குக்கு வரும் பார்வையாளர்களுக்கு பல விதமான ரசனைகள் இருப்பதால், படத்தில் பல கதைகள் இருப்பது அவசியமாகிறது.
பல கதைகள் தேவை: ஜவான் படத்தில் தந்தை மற்றும் மகன் உறவு பிடித்திருக்கும், சிலருக்கு உணர்வுபூர்வமான காட்சிகள் பிடித்திருக்கும், சிலருக்கு ஆக்ஷன் பிடித்திருக்கும். ஏதோவொரு வகையில் இந்தப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கும். இதனால்,ஒரு படத்தை உருவாக்க எனக்கு பலவகையான கதைகள் தேவைப்படுகிறது.

அது தான் என் பாணி: ஒரு திருவிழாவுக்கு போனால், அங்கு ராட்டிணம், ஐஸ்,விதவிதமான பொருட்கள், பல திண்பண்டங்கள் கிடைக்கும், இதுபோல பலவகையான விஷயங்கள் என் படத்தில் இருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அதுதான் என்னுடைய வேலையும், அதை நான் சரியாக செய்து முடித்தால் என் மனம் மகிழ்ச்சி அடையும். படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்பவர்களுக்கும் ஏதோ மன நிறைவு கிடைக்கும் என்று அட்லீ கூறியிருந்தார்.
23 படத்தில் காப்பி: ஜவான் படம் ரமணா, சர்க்கார், அஜித்தின் ஆரம்பம் என 23 படத்தின் காப்பி என ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், அட்லீயே ஒரு படம் எடுக்க எனக்கு பல கதைகள் தேவை என பேட்டியில் பேசியதை வைத்து, பல கதைகள் தேவை என்றால் புதுசா எதாவது யோசிக்கணும்,அதற்காக பழைய படத்தில் இருந்து காப்பி அடிப்பியா என இணையத்தில் அட்லீயை ட்ரோல் செய்து வருகின்றனர். என்னத்தான் அட்லீ காப்பி மன்னன் என்று பெயர் எடுத்தாலும் ஜவான் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூலை அள்ளியது என்பதுதான் உண்மை.


Click it and Unblock the Notifications











