ஓவர் சீன் போடும் குட்டி நயன்தாரா.. இதெல்லாம் ஓவர் என விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை : ஓ மை டார்லிங் சக்ஸஸ் நிகழ்ச்சியில் ஓவரா சீன் போட்ட அனிகா சுரேந்தரை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக அனிகா சுரேந்திரன் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் அப்பா, மகள் செண்டிமென்ட் காட்சி பக்கவாக இருந்தது. பார்ப்பதற்கு ஒரு சாயலில் நயன்தாரா போல இருப்பதால் இவரை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என அழைத்து வருகின்றனர்.

நடிகை அனிகா சுரேந்தர்

நடிகை அனிகா சுரேந்தர்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த அனிகா, நான் வளர்ந்து விட்டேன், பெரிய பெண்ணாகி விட்டேன் என்பதை பலமுறை கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு நாசூக்காக சொல்லிக் கொண்டிருந்தவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, புட்ட பொம்மா என்ற மலையாளப்படத்தில் நடித்தார்.

ஓ மை டார்லிங்

ஓ மை டார்லிங்

கப்பேலா என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கான இப்படம் அனிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இப்படம் கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்டது. ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே அனிகாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதையடுத்து மீண்டும் ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் பிப்ரவர் 24ந் தேதி வெளியானது.

லிப் லாக்கில் தாராளம்

லிப் லாக்கில் தாராளம்

காதல் திரைப்படமான இப்படத்தின் டிரைலர் வெளியான போதே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் அனிகா லிப்லாக் காட்சியில் தாராளமாக நடித்திருந்தார். முத்தக்காட்சி சர்ச்சை ஆனதைத் தொடர்ந்து, விளக்கம் அளித்த அனிகா, ஓ மை டார்லிங் ஒரு காதல் படம். அதில் முத்தக்காட்சி இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. கதை சொல்லும்போதே இயக்குநர் முத்தக்காட்சி குறித்து கூறியிருந்தார். இதனால், நான் நடித்தேன் என்று அனிகா விளக்கி இருந்தார்.

ஓவர் சீன்

ஓவர் சீன்

ஓ மை டார்லிங் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்ட அனிகா, கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஓவர் ஆட்டிடியூட் காட்டி உள்ளார். அதுமட்டுமில்லாமல், முத்தக்காட்சியில் நடித்தது என்னமோ தெரிய சாதனை போல ஓவராக சீன் போட்டு பேசி இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹீரோயினா நடித்ததே ஒன்றிரண்டு படம் தான் அதுக்குள்ள இவ்வளவு சீனா என அனிகாவை பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X