அசீம் எல்லாம் ஒரு ஆளே கிடையாது... மீண்டும் மீண்டும் தைரியமாக பதிவு செய்யும் ஆயிஷா

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் மீண்டும் சண்டை தொடங்கிவிட்டது.

முதலில் தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியில் மைனா நந்தினி வெற்றி பெற்றதற்கு தனலட்சுமி ரியாக்ட் செய்த விதம் வைரலானது.

இந்நிலையில், இப்போது அசீமும் ஆயிஷாவும் ஏட்டிக்குப் போட்டியாக விளையாடி வருவது ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்துள்ளது.

மீண்டும் களைகட்டிய சண்டை

மீண்டும் களைகட்டிய சண்டை

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றோடு 43வது நாளை நெருங்கியுள்ளது. ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். மீதமிருக்கும் 15 போட்டியாளர்களுடன் தொடங்கிய இன்றைய போட்டியில், இந்த வாரத்துக்கான தலைவர் பதவியில் மைனா நந்தினி வெற்றிப் பெற்றதாக தெரிகிறது. ஆனால், தனலட்சுமி மட்டும் பெட்ரூம் ஏரியாவில் சென்று கட்டிலை விட்டு நகராமல் அடம் பிடித்தார்.

ஆயிஷா – அசீம் மோதல்

ஆயிஷா – அசீம் மோதல்

மேலும், தனலட்சுமியை சமாதானம் செய்யப் போன ஷிவின், ரச்சிதாவிடமும் அவர் கோபமாக பேசியது, கேப்டன்சி டாஸ்க்கில் ஏதோ பிரச்சினை என தெரிகிறது. இந்நிலையில், தலைவருக்கான போட்டியில் ஃபுட்பால் போன்று போட்டி வைத்தார்கள் இதில் மைனாவுக்கு ஆதரவாக அயிஷாவும் ராமும் இறங்கினர். கதிரவனுக்கு அசீமும், விக்ரமும், தனலட்சுமிக்கு மணிகண்டன், அமுதவாணன் இறங்கினர். அப்போது பாலை மைனா பக்கம் அடிக்க அசீம் அடித்ததில் அயிஷா முகத்தில் பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து விளையாடினார். இது யதார்த்தமாக நடந்தது போல இருந்தாலும், ஜிம் பால் ஆயிஷாவை தாக்கியது நெட்டிசன்களை உசுப்பேற்றிவிட்டது.

அசீம் கேரக்டர் வொர்ஸ்ட்

அசீம் கேரக்டர் வொர்ஸ்ட்

நேற்றைய தினம் கமல் முன்னிலையில் நடந்த வாள், அட்டக் கத்தி டாஸ்க்கில், அசீம்லாம் ஒரு ஆளே கிடையாது என அவருக்கு அட்டைக் கத்தி கொடுத்தார் ஆயிஷா. மேலும், எவிக்சன் லிஸ்ட்டிலும் ஆயிஷாவின் விருப்பம் அசீமாக தான் இருந்தார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் ஆயிஷாவின் முகத்தை குறிவைத்து அசீம் பந்தை உதைத்தார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதன்பின் தனலட்சுமியுடன் தனியாக உக்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் ஆயிஷா, அசீம் ஒரு தனி கேரக்டர் என பேசுகிறார்.

அசீமை கண்டுக்குறதே இல்லை

அசீமை கண்டுக்குறதே இல்லை

இந்த சீசன்ல மாத்தி மாத்தி பேசுற ஆள் யாரையும் நான் பார்க்கலைன்னு ஆயிஷா தனமிடம் கூறுகிறார். அதற்கு தனம் நான் பார்த்தவரைக்கும் அது அசீம் தான் என்கிறார். அதற்கு மீண்டும் பதில் சொல்லும் ஆயிஷா, "அசீம் ஒரு தனி கேரக்டர் அத விட்டுறு. அசீம் எல்லாம் ஒரு கேரக்டர், இத அசீம் கிட்ட நேர்லயே போய் சொல்லிடலாம். மத்தவங்க கிட்ட சொல்ல தான் யோசிக்கணும். ஆனா அசீம்கிட்ட சொல்ல யோசிக்கவே வேண்டாம்" என பேசுகிறார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து அசீம் - ஆயிஷா சண்டையை ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X