‘பராசக்தி‘ படத்தில் இந்திரா காந்தியாக நடித்தது விஜய் டிவி புகழா? ட்ரோல் செய்யும் இணையவாசிகள்!

சென்னை: சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் ஜெயம் ரவி வில்லான அறிமுகமாகி உள்ளார். மேலும், நடிகர் அதர்வா, சேத்தன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இந்திராகாந்தியாக நடித்தவர் யார் என்பது பற்றி பல மீம்கள் இணையத்தில் உலா வருகின்றன. அவை என்ன என்றுபார்க்கலாம்.

1960 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் எப்படி இருந்தது? அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் எழுச்சி எந்த அளவிற்கு இருந்தது, ஹிந்தி மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எதிர்த்து மாணவர்கள் எப்படி உயிர் தியாகம் செய்தார்கள் என்பதை திரைப்படமாக 'பராசக்தி' என்ற பெயரில் இயக்குனர் சுதா கொங்கரா எடுத்து இருக்கிறார். இதில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று, முதல் நாளிலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக பேசும் வசனங்கள், முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா வரும் காட்சிகள் என சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து வருகின்றனர்.

Parasakthi sivakarthiyan
Photo Credit:

பராசக்தி : இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தையும், அதன் விளைவுகளை காட்சிப்படுத்தி உள்ளனர். அப்போது, பிரதமர் இந்திரா காந்தி முக்கிய சில அரசியல் முடிவுகளை எடுப்பது போல காட்சியில் வரும். தற்போது, இணையத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் அந்த கதாபாத்திரத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். சிலர் இது விஜய் டிவி புகழ் என்றும், சிலர் புகழ் இல்லை பிக் பாஸ் மாயா என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதைப்பார்த்த சிலர், எதற்கு இந்திரா காந்தியை இப்படி கேவலப்படுத்திறீங்க என்றும், இயக்குனர் மேடம் உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இல்லயா? என கேட்டு வருகின்றனர். மேலும், பராசக்தி படத்தில், 'தமிழுக்கு பண்ண துரோகத்துக்கு இனி இந்த ஜென்மத்துக்கு நீங்க ஆட்சிக்கே வர முடியாது' என்று காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வசனம் இடம்பெற்றதாக சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X