ராஜராஜ சோழன் ஜெயம் ரவியை Rugged Boy-ஆக மாற்றிய அகிலன்... செல்ஃப் எடுக்காமல் போக என்ன காரணம்?
சென்னை: ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.
அகிலன் படத்தில் ஜெயம் ரவியுடன் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான அகிலன் திரைப்படம் நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

ஜெயம் ரவியின் அகிலன்
ஜெயம் ரவி நடிப்பில் கடந்தாண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானது. விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் ஜெயம் ரவி. முக்கியமாக ராஜராஜ சோழன் கேரக்டரில் ஜெயம் ரவியின் நடிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், தற்போது நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

தோல்விக்கு என்ன காரணம்?
ஹார்பர், ஷிப்பிங், லாஜிஸ்ட்டிக், கடல் வாணிபம் என்ற பெயரில் மிகப் பெரிய கள்ளக்கடத்தல்கள் நடக்கின்றன. மாஃபியாக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்பரை மக்களின் நலனுக்காக எப்படி பயன்படுத்தலாம் என போராடும் ஹீரோ தான் அகிலன். அதற்கான காரணம் என்ன என்பதையும் போகிறப் போக்கில் சொல்ல முயற்சிக்கிறார் இயக்குநர். ஆனால் இங்கே தான் மொத்த திரைக்கதையும் நங்கூரம் இல்லாத கப்பலை போல தத்தளிக்கிறது. இந்தப் படத்தின் முதல் தடுமாற்றமே திரைக்கதை தான்.

Rugged Boy ஜெயம் ரவி
பொன்னியின் செல்வனில் சாக்லேட் பாய்-ஆக பார்த்த ஜெயம் ரவியா இது என ரசிகர்களுக்கே சந்தேகம். கண்டெய்னர் போல உடம்பை முறுக்கேற்றிக் கொண்டு Rugged Boy போல வலம் வரும் ஜெயம் ரவி, டயலாக் டெலிவரியிலும் கொஞ்சம் சேஞ்ச் ஓவர் செய்து பார்த்திருக்கிறார். ஆனால், அது எவுதுமே சுத்தமாக எடுபடவில்லை என்பதே உண்மை. முக்கியமாக இரண்டாம் பாதியில் வரும் அப்பா - ஜெயம் ரவி கேரக்டர் கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகவில்லை.

காஸ்டிங்கில் சொதப்பல்
முதல் பாதியிலேயே கதை என்னவென்று தெரியாமல் தத்தளிக்கும் ரசிகர்களுக்கு, இரண்டாவது பாதியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகள் இன்னும் தலை சுற்ற வைக்கிறது. ஜெயம் ரவியை தவிர மற்ற பாத்திரங்களில் அவ்வளவு வெயிட்டேஜ் இல்லை என்பதே உண்மை. ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜிராக் ஜானி, தருண் அரோரா, பாக்ஸர் தீனா, மதுசூதன் இவர்களின் பாத்திர வார்ப்புகள் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. அதேபோல், சில முக்கியமான காட்சிகள் டீட்டெயிலிங் இல்லாமல் ஏனோதானோ என்று நகர்கின்றன.

நல்ல கதை இருந்தும் இப்படியா?
ஹார்பரில் இல்லீகலாக பல பிஸினஸ்கள் நடக்கும் போது, அதன்மூலம் மக்களுக்கும் உதவினால் என்ன என்று கேள்வியை முன் வைக்கிறார் இயக்குநர். ஆனால், கதையிலும் திரைக்கதையிலும் அதற்கான நியாயங்களை சேர்க்கவில்லை என்பதே ரசிகர்களை நொந்து போகச் செய்கிறது. அதேபோல், ஜெயம் ரவி உட்பட வில்லன்கள் அனைவருமே ஆக்ஷன் சீன்ஸ்களுக்கு ஏற்ற மெட்டீரியல்கள் தான். ஆனால், அங்கேயும் ஓவர் லேப் காட்சிகளால் எந்த விறுவிறுப்பும் இல்லை என்பதே பெரும் சோகம்.

இதில் மட்டும் கெட்டிக்காரத்தனம்
இந்த ஒரே கதையில் ஹார்பர் பின்னணியில் நடக்கும் அனைத்தையும் சொல்ல நினைத்தது தான் இயக்குநரின் மிகப் பெரிய தவறு. அதேநேரம் படம் முழுவதையும் ஒரே லொக்கேஷனில் எடுத்து பட்ஜெட்டை மிச்சப்படுத்தியுள்ளார் கல்யாண் கிருஷ்ணன். ஹார்பர், கப்பல்கள், கண்டெய்னர்கள், கடல் இவைகள் மட்டுமே திரை முழுவதும் நிரம்பி இருக்கின்றன. சாம் சிஎஸ்-இன் இசையும் பெரிதாக கை கொடுக்காமல் போனது ஏமாற்றமே. விவேக் ஆனந் சந்தோசம் தனது கேமராவால் டார்க் ஷேடிங்கை அள்ளித் தெளித்துள்ளார். அதுமட்டுமே அகிலனுக்கு கொஞ்சம் பக்க பலமாக உள்ளது. மொத்தமாக அகிலன் ரசிகர்களை ஏமாற்றக் கூட தெரியாத தந்திரக்காரனாக வலம் வருகிறான்.


Click it and Unblock the Notifications