இதயம் கவர்ந்த ஜோதிகா பேசுவது சரியா.. சந்திரமுகி ஞாபகம் இருக்கா மேடம்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
சென்னை: ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி, மொழி, காற்றின் மொழி, ராட்சசி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், தி காதல் கோர் ஆகிய படங்கள் தென்னிந்திய மக்களால் கொண்டாடப்பட்ட படங்களாக உள்ளன. பெண் கதாப்பாத்திரங்களை போற்றி ரசித்து கொண்டாடப்பட்ட படங்களின் வகையில் ஜோதிகாவும் இடம்பிடித்துள்ளார் என்பது பிரம்மிப்பை தருகிறது. ரேவதி, சுஹாசினி, ஊர்வசி, குஷ்பு, ராதிகா ஆகியோரின் வரிசையில் ஜோதிகாவும் இடம்பிடித்துள்ளார். ஆனால், தென்னிந்திய சினிமாவை பொதுப்புத்தியோடு ஆணாதிக்கம் என பேசியிருப்பதை ஏற்க முடியவில்லை என தமிழ் சினிமா ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
குஷி: எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி படத்தில் விஜய் - ஜோதிகாவும் நடித்திருப்பார்கள். கதையே இல்லாத ஒரு காதல் கதை இளைஞர்கள் கொண்டாடிய படமாகவும் விஜய் - ஜோதிகாவிற்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படமாகவும் இருக்கிறது. இப்படத்தில் காதலர்களுக்குள் இருக்கும் ஈகோவை மையப்படுத்தி உருவானது. இப்படத்தில், விஜய்க்கு நிகரான கதாப்பாத்திரம் தான் ஜோதிகாவுக்கும் இருக்கும். தமிழில் இளம் கதாநாயகியாக வந்த ஜோதிகா, அவர் நடித்த 2வது படமே லீட் ரோல் தான அவரை சுற்றிதான் கதையே இருக்கும்.

மொழி: ஜோதிகா பல படங்களில் நடித்திருந்தாலும் மொழி எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கிறது. இனிமேலும் ஜோதிகா நினைத்தாலும் இப்படியொரு கதாப்பாத்திரம் கிடைக்கப்போவதும் இல்லை, நடிப்பதும் கடினம் தான். மொழியை பற்றி பேசினால் நம் மெளனங்கள் அனைத்தும் முதலில் ஜோதிகாவிடமே செல்லும். மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பிருத்விராஜ் தமிழுக்கு புதிதுதான். ஜோதிகா நடிப்புக்காகவே இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படம் முழுக்க மெளன மொழிகளிலேயே ஜோதிகா பேசியிருப்பார். தமிழ் ரசிகர்கள் கமர்ஷியல் ஹிட் கொடுத்து வரவேற்றனர்.
சந்திரமுகி: ஜோதிகாவின் கரியரில் மிக முக்கியமான படம் என்றால் சந்திரமுகி தான். ஜோதிகா இப்படம் குறித்து பல பேட்டிகளில், சூர்யா, விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்கள் படங்களில் கூட பெண் கதாப்பாத்திரம் பெரிதாக இருப்பது இல்லை. ஆனால், சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் தைரியமாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அவரைபோன்று முன்னணி ஹீரோக்களும் முன்வரவேண்டும் என்றும் அவர்களுக்கும் ஜோதிகா சவால் செய்து காண்பித்தார்.

வேட்டையாடு விளையாடு: கமல் எனும் மாபெரும் கலைஞன் படத்தில் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கும் பலரில் ஜோதிகாவும் ஒருத்தராக இருந்தார். தெனாலி படத்திற்கு பிறகு கமலுடன் ஜோதிகா நடித்த படம் வேட்டையாடு விளையாடு. இப்படத்தில் ஆராதனாவை எப்படி மறக்க முடியும். காதலை கூட கவிதை மொழிகளில் கமலுடன் பேசி நடித்திருப்பார். கெளதம் இயக்கும் படங்களில் பெண்களுக்கென்று தனி சிறப்பு இருக்கும். அதேபோன்றே ஜோதிகாவை வடிவமைத்திருப்பார். இப்படத்தின் இரண்டாம் பாதி முழுக்க ஜோதிகா கண்களாலே களவாடிசென்றிருப்பார். ரசிகர்கள் அந்த பார்வையில் மெய்மறந்து ரசித்தனர்.
காதல் தி கோர்: 36 வயதினிலே படத்தில் கம்பேக் கொடுத்திருந்தாலும் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் மிக முக்கியமான படமாக இருக்கிறது. ஒரு ஹீரோவுக்கான பில்டப்களும் பயமறியாத பார்வையும், துணுக்கு பேச்சுகளும் ஜோதிகாவிடம் காணலாம். நாச்சியாரில் திமிர் பிடித்த போலீசாகவும் மிரட்டியிருப்பார். அதே போன்று கடந்த 2023இல் வெளியான காதல் தி கோர் திரைப்படம் தமிழ், மலையாள ரசிகர்கள் கொண்டாடி ரசித்த படம். மம்மூட்டிக்கு இணையான கதாப்பாத்திரத்தில் ஜோதிகா நடித்திருப்பார். படம் முழுக்க கணவன் செய்த தவறை மறைத்து ஏமாற்றப்பட்ட பெண்ணின் வலிகளையும்,அன்புக்காக ஏங்கி தவிக்கும் பெண்ணாக ஸ்கோர் செய்திருப்பார் ஜோதிகா.

ஆணாதிக்க சினிமாவா இது?: மேலே பட்டியலிடப்பட்ட படங்கள் அனைத்தும் ஜோதிகாவின் கதாப்பாத்திரங்களையும் அவரது நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். டாப் ஹீரோக்களான விஜய், சூர்யா, அஜித், கமல், மம்மூட்டி போன்ற சூபபர் ஸ்டார்களுக்கு இணையான பாத்திரங்களை ஏற்று ஜோதிகா நடித்திருப்பார். ஆனால், அவர் பாலிவுட்டில் நடித்த சைத்தான் பெயரளவுக்குதான் அவரது கதாப்பாத்திரம் இருக்கும். பெண்ணுக்கு தாயாக மட்டுமே வந்து செல்வார். அவ்வளவு பெரிய அளவிலும் இருக்காது ஆனால், தென்னிந்திய சினிமாவை ஆணாதிக்கம் என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும் என தென்னிந்திய ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்குகின்றனர். இங்கே நடித்து சம்பாதித்து தயாரித்துவிட்டு குறை சொல்வது நியாயமா மேடம் என நெட்டிசன்கள் ஜோதிகாவை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











