For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நயன்தாராவை கேலி செய்த நடிகை இவர்தானா?ஏய் படவுர் மூஞ்சி அவ்வளவுதான்..விளாசும் நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை : கனெக்ட் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, தன்னை ஒரு நடிகை கேலி செய்தது பற்றி பேசி இருந்தார். இந்த நடிகை யார் என்று கண்டுபிடித்த நெட்டிசன்ஸ் அவரை கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.

  இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் கனெக்ட்.

  இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  எக்ஸ் ஆபாச நடிகை படத்தை வாங்க யாருமே இல்லையாம்.. கடும் அப்செட்டில் அம்மணி.. இப்படி ஆகிடுச்சே? எக்ஸ் ஆபாச நடிகை படத்தை வாங்க யாருமே இல்லையாம்.. கடும் அப்செட்டில் அம்மணி.. இப்படி ஆகிடுச்சே?

  கனெக்ட்

  கனெக்ட்

  ஹாரர் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கனெக்ட். இப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களுக்குச் சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். 99 நிமிடங்கள் ஓடும் இந்த படத்திற்கு இடைவேளை இல்லை. கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

  நயன்தாரா பேட்டி

  நயன்தாரா பேட்டி

  இந்த படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த நயன்தாரவிடம், பிரபல தொகுப்பாளினி டிடி கேள்விகளை கேட்டார். அதில், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாதற்கான காரணத்தை நயன்தாரா கூறினார். இப்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிறைய வருகிறது.

  இதுதான் காரணம்

  இதுதான் காரணம்

  ஆனால், என்னுடைய ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வெளிவராது. அப்போது ஏன் ஹீரோயின்ஸுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறது என நினைப்பேன். அந்த சமயத்தில் ஆடியோ லாஞ்சுக்கு போனால் கூட நம்மை எங்கயாச்சும் ஓரமாக நிக்க வைப்பார்கள் இதனால், நான் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை தவிர்த்தேன் என்றார்.

  எது பண்ணாலும் தப்பு

  எது பண்ணாலும் தப்பு

  மேலும்,விமர்சனங்கள் எப்போதும் வந்து கொண்டு தான் இருக்கும், அப்போ இல்ல இப்ப வரைக்கும் விமர்சனங்கள் வந்திட்டு இருக்கு. ஒவ்வொரு படத்துலயும் ஒன்னு ஒன்று சொல்றாங்க, உடல் எடை கூடிட்டா, எடைய குறைச்சிட்டா எது பண்ணாலும் எதாவது ஒன்னு சொல்லிட்டுத்தான் இருப்பாங்க. எது பண்ணாலும் தப்பா ஆகிடுது. என் இயக்குனர்கள் என்கிட்ட என்ன சொல்றாங்களோ அதை நான் செய்கிறேன் அவ்வளவுதான்.

  கிண்டலடித்து இருந்தார்

  அதேபோல சமீபத்தில் ஒரு நடிகையின் நேர்காணாலை பார்த்தேன், என் பெயரை சொல்லவில்லை. ஆனால் என்னைப்பற்றி தான் சொன்னார்கள். ஒரு ஹாஸ்பிடல் சீனில் தலைமுடி, லிப்ஸ்டிக் என அப்படியே புஃல் மேக்கப்பில் இருந்தாங்க, எப்படி ஒரு ஹாஸ்பிடல் சீன்ல இப்படி நடிச்சாங்க என்று தெரியவில்லை என்று சொல்லி இருந்தாங்க.

  கமர்ஷியல் ஃபிலிம்..ரியலிஸ்டிக் ஃபிலிம்

  கமர்ஷியல் ஃபிலிம்..ரியலிஸ்டிக் ஃபிலிம்

  அதற்காக ஹாஸ்பிடல் சீனில் தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே. கமர்ஷியல் ஃபிலிம், ரியலிஸ்டிக் ஃபிலிம்னு இருக்கு. ரியலிஸ்டிக் ஃபிலிம்ல அதற்கு ஏற்றமாதிரி அனைத்தும் கவனத்துடன் செயப்படும். ஆனால், அவங்க சொன்னது கமர்ஷியல் ஃபிலிம்பில் பற்றிதான். அந்த சீனுக்கு நான் சோகமாகத்தான் மேக்கப்போட்டுக்கொண்டு போனேன் ஆனால் என் டைரக்டர் எதுக்கு இவ்வளவு சோகம். தேவையில்லை என்றார். ஏன் என்றால் அது கமர்ஷியல் ஃபிலிம் என்று பதிலளித்து இருந்தார்.

  ஏய் பவுடர் மூஞ்சி

  ஏய் பவுடர் மூஞ்சி

  நயன்தாராவின் இந்த நேர்காணாலை பார்த்தவர்களுக்கு நயன்தாராவை கேலி செய்த நடிகை யார் என்று தெரியவில்லை. பின்னர் அவர்கள் அலசி ஆராய்ந்து அது யார் என்று கண்டுபிடித்து அவர் பேசிய வீடியோவையும் வெளியிட்டு அந்த நடிகை வெச்சு செய்து வருகிறார்கள். அந்த நடிகை வேறுயாரும் இல்லை மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தான். நடிச்சதே 3 படம் அதுக்குள்ள நயன்தாராவை பற்றி கிண்டலடிக்கிறியா? என்றும், ஏய் பவுடர் மூஞ்சி அவ்வளவுதான் என்றும் கண்டபடி திட்டி வருகின்றனர்.

  English summary
  Netizens are trolling Malavika Mohanan for teasing Nayanthara.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X