For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சீரியஸ்னஸ் தெரியாமல் விளையாடும் மைனா, மணிகண்டன்… கமல் முன்னாடி மரியாதையே இல்லாம இப்படியா?

  |

  சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த மாதம் 9ம் தேதி தொடர்ந்து 50 நாட்களாக நடைபெற்று வருகிறது.

  பிக் பாஸ் வீட்டில் 21வது போட்டியாளராக அடியெடுத்து வைத்த மைனா நந்தினி இந்த வாரம் கேப்டனாகவும் பொறுப்பேற்றார்.

  மைனா நந்தினியும் மணிகண்டனும் குரூப்பிஸம் செய்வதாக ஹவுஸ்மேட்ஸ் குற்றம்சாட்டிய நிலையில், அவர்கள் கமல் முன் மரியாதை இல்லாமல் பேசியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  சும்மாவே இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு இவ்ளோ சம்பளமா…? லட்சங்களை சம்பளமாக வழங்கிய பிக் பாஸ்!சும்மாவே இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு இவ்ளோ சம்பளமா…? லட்சங்களை சம்பளமாக வழங்கிய பிக் பாஸ்!

  பிக் பாஸ் வீட்டில் இதுவரை

  பிக் பாஸ் வீட்டில் இதுவரை

  கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இதுவரை 50 நாட்களை கடந்துவிட்டது. மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இப்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோருடன், இந்த வாரம் ராபர்ட் மாஸ்டரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இதனிடையே, இந்த வாரம் அகம் டிவி வழியே பேசிய கமலிடம் மைனா நந்தினியும் மணிகண்டனும் விளையாட்டுத்தனமாக நடந்துகொண்டது பார்வையாளர்களை எரிச்சல்படுத்தியுள்ளது.

  அதிகபிரசங்கித்தனமாக பேசும் மைனா

  அதிகபிரசங்கித்தனமாக பேசும் மைனா

  பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் போதே, விக்ரம் படத்தில் நானும் நடிச்சிருக்கேன் சார் என கமலிடம் சீன் போட்டார் மைனா. ஆனால், அது எனக்கு படம் பார்க்குறவரை தெரியாதே என சாஃப்ட்டாக நோஸ்கட் கொடுத்தார் கமல். எப்போதுமே எல்லோரிடமும் விளையாட்டுத்தனமாக இருப்பதே மைனா நந்தினியின் வழக்கமாக உள்ளது. ஆனால், அது சில நேரங்களில் பிரச்சினைகளை பக்குவமாக அணுகும் மைனா, சில இடங்களில் சீரியஸ்னஸ் தெரியாமல் அதிகபிரசங்கித்தனமாக பேசுவதை ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். முக்கியமாக எல்லா போட்டியாளர்களும் 'பிக் பாஸ்' என அழைக்க, அவர் மட்டுமே 'நைனா' என கிரிஞ்சாக செயல்படுகிறார்.

  சைலண்டாக கலாய்த்த கமல்

  சைலண்டாக கலாய்த்த கமல்

  இந்நிலையில், கடந்த வாரம் கொடுக்கப்பட்ட கோர்ட் டாஸ்க்கில் வழக்கு தொடுக்காத போட்டியாளர்களில் மைனாவும் ஒருவர். இப்படி விளையாடினால் போர் அடிக்கும் என எச்சரித்த கமல், மைனாவிடம் நீங்கள் யார் மீது வழக்கு தொடுத்திருப்பீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த மைனா, "Safe Game ஆடுவதாக ரச்சிதா மீது கொடுத்திருப்பேன்" எனவும், கமல் திருப்பி அதை நீங்க சொல்றீங்களா என மைனாவும் Safe Game ஆடுவதை மறைமுகமாக குத்திக் காட்டினார். அதேபோல், மைனா நந்தினி - மணிகண்டன் இருவர் மீதும் குரூப்பிசம் குறித்த புகார் வந்த போதும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

  கமல் முன்னாடி அப்படி பேசலாமா?

  கமல் முன்னாடி அப்படி பேசலாமா?

  குரூப்பிசத்துக்கு எடுத்துக்காட்டாக Luxury பட்ஜெட் டாஸ்க்கில் மைனாவும் மணிகண்டனும் சொல்லிவைத்து விளையாடியதை கமல் பஞ்சாயத்துக்கு கொண்டு வந்தார். "நீங்க அப்படி விட்டுக்கொடுத்து விளையாடுவது சரியா" என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவரை முழுமையாக பேசவிடாத மைனா "டேய்... நான் அப்பவே சொன்னேன்ல, இது பிரச்சினையாகும்ன்னு" என பக்கத்தில் இருந்த மணிகண்டனை அடித்து செல்லமாக விளையாடினார். கமல் அந்த இடத்தில் அவர்கள் இருவரையும் கண்டிக்கவில்லை என்றாலும், அவரது முகம் கொஞ்சம் சிவந்தது. மைனா அந்த இடத்தில் "டேய்" என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கவே கூடாது, முக்கியமாக நடுவில் பேசியதே கமலை அவமதிக்கும் செயல் என நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர்.

  மணிகண்டனும் சரியான கிரிஞ்ச் தான்

  மணிகண்டனும் சரியான கிரிஞ்ச் தான்

  மணிகண்டனும் மைனாவும் ஃபிரண்ட்ஷிப் என நடந்துகொள்வது கிரிஞ்சாக இருக்கிறது என பார்வையாளர்கள் தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போதும் அது என்னவென்றே தெரியாத மாதிரி மைனா நடந்துகொண்டார். முக்கியமாக ஒப்பன் நாமினேஷன் பஞ்சாயத்தில் மணிகண்டனிடம் கமல் சீரியஸ்ஸாக பேசிய போதெல்லாம், அவர் அதை புரிந்துகொள்ளாமல் சிரித்துக்கொண்டே கடுப்பேற்றினார். அதனால் அவருக்கு கடைசிவரை மரண பயத்தைக் காட்டினார் கமல். அப்போதும் கூட கமல் என்ன சொல்ல வருகிறார் என்ற புரிதல் இல்லாமல் சிறுபிள்ளைத்தனமாக மணிகண்டன் நடந்துகொண்டதும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

  English summary
  Bigg Boss Season 6 hosted by Kamal Haasan has crossed 50 days. Robert Master was evicted from the Bigg Boss house this week. In this case, Netizens are trolling Myna Nandhini and Manikandan who are playful in front of Kamal.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X