படுக்கையறை காட்சியில் நடித்து பெயரை கெடுத்துக் கொண்ட ராஷ்மிகா.. குடும்பத்தில் வெடித்த சர்ச்சை!
சென்னை: அனிமல் படம் முழுக்க முழுக்க ஆண் சிந்தனை இருப்பதாகவும், பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும் படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன. அதோடு படத்தில் ராஷ்மிகா மந்தனா லிப் லாக் காட்சி மற்றும் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியதால், அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. ஆனால், ஓடிடியில் அந்த காட்சி அப்பட்டமாக ஒளிபரப்பானதால், அவரின் குடும்பத்தில் சர்ச்சை வெடித்துள்ளது.
இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய அனிமல் படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாகவும், ராஷ்மிகா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அனில் கபூர், பாபி தியோல், சுரேஷ் ஓபராய் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கடந்த டிசம்பர் 1ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனிமல் படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனம் வந்த போதும், இப்படம் ரூ.900 கோடிக்கும் மேல் வசூலாகி ரன்பீர் கபூர் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படமாக மாறி உள்ளது.

இப்படத்தின் வெற்றிவிழா கடந்த வாரம், மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ரன்பீர் கபூர், ஆலியா பட், நடிகர் அனில் கபூரும், உபேந்திர லிமாயே, தயாரிப்பாளர் பூஷன் குமார், நடிகர் பிரேம் சோப்ரா,கரன் ஜோகர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், தமன்னா ஆகியோர் கலந்து கொண்டார்.
அனிமல் திரைப்படம்: இந்நிலையில் அனிமல் திரைப்படம் ஜனவரி 26ந் தேதி ஓடிடியில் வெளியானது. கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான இந்த படத்தில் எட்டு நிமிட காட்சிகள் நீக்கப்பட்ட நிலையில், அந்த காட்சி எந்தவிதமான கட்டும் இல்லாமல் Netflix ஓடிடி தளத்தில் பார்த்த ரசிகர்கள் பாலிவுட்டிற்கு சென்ற ராஷ்மிகா படு மோசமாக ஆகிவிட்டாரே என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் கழுவி ஊற்றினார்கள்.
குடும்பத்தில் வெடித்த சர்ச்சை: மேலும், பத்து முறை தெளிவாக காட்டும் லிப் கிஸ் என முத்தக்காட்சியால் முகம் சுளிக்க வைத்த ராஷ்மிகாவை குடும்பங்கள் பலவும் திட்டி தீர்த்து வருகின்றனர். அடுத்த மாதம் ராஷ்மிகாவிற்கும் விஜயதேவகொண்டாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கும் நிலையில், ராஷ்மிகாவின் படுமோசமான படுக்கை அறை மற்றும் முத்தக்காட்சியால் அவரது குடும்பத்தில் சர்ச்சை வெடித்துள்ளது.
அனிமல் அனிமலுக்கான படம்: இந்த நிலையில், ஓடிடியில் அனிமல் படம் பார்த்த பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸூம் இந்தப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனிமல் படம் அனிமலுக்காக எடுக்கப்பட்ட படம்.. ஆகையால் நான் உண்மையான விலங்குகளை புண்படுத்தவில்லை என்று பதிவிட்டு இருக்கிறார். இதில், நான் நிஜ விலங்குகளை குறிப்பிடவில்லை என படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியை கடுமையாக விமர்சித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











