Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- News
சோபகிருது வருட பலன்.. குரு பெயர்ச்சி..4 ராசிக்காரர்களுக்கு யோகம்..இந்த 2 ராசிக்காரர்கள் கவனம்
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
தீ தளபதி பாடல் காப்பியா?..வசமாய் சிக்கிய ‘வாரிசு‘..தமனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
சென்னை : வாரிசு படத்தின் இரண்டாவது பாடல் நேற்று வெளியான நிலையில், இந்த பாடலும் காப்பியா என கேட்டு இணையத்தில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். குடும்ப சென்டிமெண்ட் கொண்ட இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
சிம்புவின் தரமான சம்பவம் '’தீ இது தளபதி“..வாரிசு 2வது பாடலை கொண்டாடும் ஃபேன்ஸ்!

வாரிசு
பீஸ்ட் திரைப்படத்திற்கு பின் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது. இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘தீ தளபதி‘ வேறலெவல்
வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' பாடல் நேற்று வெளியானது. விஜய்க்காக சிம்பு பாடிய இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் தமன் விஜய்க்காக முதன்முறையாக இசையமைத்துள்ளார். நேற்று இணையத்தில் வெளியான இந்த பாடல் வெளியான 2 மணிநேரத்திலேலே 1.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

தீ தளபதி பாடல் காப்பியா?
தீ தளபதி பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடிவரும் நேரத்தில் இந்த பாடலும் காப்பியா என கேட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்றுள்ள வரவா...வரவா என்ற பாடலை போல இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். அனிருத் இசையில் இந்த பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பாடலாகும். இசையமைப்பாளர் தமன் அந்த பாடலை காப்பி அடித்து தீ தளபதி பாடலை உருவாக்கியுள்ளார் என ரசிகர்கள் இணையத்தில் தமனை விளாசி வருகின்றனர்.

ரஞ்சிதமே...ரஞ்சிதமே
அதே போல, கடந்த மாதம் வெளியான ரஞ்சிதமே...ரஞ்சிதமே பாடலும் மொச்சக்கொட்ட பல்லழகி பாடலை போல இருப்பதாக கூறி ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். ஆனால், அந்த பாட்டு வேற, இந்த பாட்டு வேற, இது காப்பி எல்லாம் இல்லை என விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்தனர். தற்போது இரண்டாவது சிங்கிள் வெளியாகி உள்ள போதும் காப்பியா? என ட்ரோல் செய்து தமனை வம்பிழுத்து வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள்
தீ தளபதி பாடல் குறித்து சோஷியல் மீடியாவில் எந்த மாதிரியான விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் பாடலை கொண்டாடி வருகின்றனர். ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கு இப்பாடல் மிகவும் பிடித்துள்ளதாகவும், படத்தில் இப்பாடல் வேற லெவலில் இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.