Don't Miss!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- News
அசத்தலாக மாறப்போகும் 'வாட்ஸ்-அப்'.. வருகிறது 5 புதிய அப்டேட்கள்.. அடடே! என்னென்ன வசதிகள்!
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த வாரம் நாமினேஷன் கிடையாது… ஹவுஸ்மேட்ஸை அலறவிடும் அசீம்… விளாசும் நெட்டிசன்கள்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் அசீம் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
முதல் வாரத்தில் இருந்தே சக போட்டியாளர்களுடன் தேவையில்லாமல் சண்டையிட்டு வரும் அசீம், எவிக்சனில் இருந்தும் தப்பித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் என்பதால் எவிக்சன் நாமினேஷனில் இருந்து தப்பியுள்ள அசீம், மீண்டும் தனது அட்ராசிட்டியை தொடங்கியுள்ளது ஹவுஸ்மேட்ஸை கதிகலங்க வைத்துள்ளது.
லூசு மாதிரி பேசாதீங்க..கடும் வாக்குவாதத்தில் அசீம், ஜனனி..ரணகளமான பிக் பாஸ் வீடு!

கேப்டன் அசீம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, இதுவரை 50 நாட்களை கடந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் வீட்டின் கேப்டன் டாஸ்க்கில் அசீம், ஷிவின், விக்ரமன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில், அசீம் வெற்றிப் பெற்று பிக் பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார். அதனால், அவர் இந்த வாரம் எவிக்ஷன் நாமினேஷனில் இருந்து தப்பியுள்ளார்.

மீண்டும் ஆட்டம் தொடங்கியது
சும்மாவே காலுக்கு சலங்கை கட்டினது போன்று ஆடும் அசீம், இந்த வாரம் எவிக்ஷன் நாமினேஷனில் கிடையாது என்பதால் பிக் பாஸ் வீட்டையே அதகளம் செய்து வருகிறார். ஏலியன்ஸ் - பழங்குடியின மக்கள் என அவதார் பட கான்செப்ட்டில் இந்த வாரம் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில், அசீம், விக்ரமன், ஷிவின், கதிர், மைனா, ஏடிகே ஆகியோர் ஏலியன்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர். இதில், ஏலியன்ஸ் வீட்டில் போய் பூவை திருடி வரும் டாஸ்க்கில் அசீமுக்கும் ஹவுஸ்மேட்ஸ்க்கும் இடையே மோதல் வெடித்தது.

பிக்பாஸ் ப்ரோமோ கண்டெண்ட்
முதலில் ஜனனியுடன் மோதிய அசீமை விக்ரமன், ஷிவின் ஆகியோர் கண்டித்தனர். கடைசியில் அது அசீம் - விக்ரமன் இடையேயான மோதலாக வெடித்தது. சென்ற வாரம் நடந்த நீதிமன்றம் டாஸ்க்கில் தனக்காக வாதடிய அசீமை நல்லவன் என சொன்ன ஜனனிக்கு, இந்த வாரம் அவரே எதிர்பாராத ட்வீஸ்ட் கிடைத்துள்ளது. நல்லவன் என்று நினைத்த அசீம் வில்லத்தனமாகவும் தவறாக நினைத்த விக்ரமன், ஏடிகே நல்லவர்களாகவும் தெரிகின்றனர். ஒருகட்டத்தில் டீமாக விளையாட முடியாது, நான் தனியாக பார்த்துக்கொள்கிறேன் என அசீம் எகிற, மொத்த போட்டியாளர்களும் அவரை சூழ்ந்துவிட்டனர்.

சண்டைக்குப் போன அமுது
ஒவ்வொரு முறையும் தேவையே இல்லாமல் ஹவுஸ்மேட்ஸ்களுடன் வம்பிழுத்து வரும் அசீமிடம், "நீ என்ன பெரிய ரவுடியா?" என அமுதவாணன் சண்டைக்கே போய்விட்டார். தொடர்ச்சியாக யாருடைய பேச்சையும் கேட்காமல் தான்தோன்றித்தனமாக விளையாடுவதுடன் ஹவுட்ஸ் மேட்ஸ்கள் அனைவரிடமும் அசீம் அத்துமீறி நடந்துகொள்வதும் பேசுவதும் சர்ச்சையாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் அசீம் மீது தனலட்சுமி முட்டை அடித்தார். அதன் பின்னர் அதனை மனதில் வைத்துக்கொண்டு, "தனலட்சுமி வெளியே போனதும், சென்னைல இருந்து ஈரோடு வரை மக்கள் முட்டை அடிப்பாங்க" என அவரை சீண்டியதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.