கேஜிஎஃப் வெர்ஷனா பத்து தல... டீசர் பார்த்து ஜெர்க் ஆன நெட்டிசன்கள்... ரிஸ்க் எடுக்கும் சிம்பு!

சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது.

ஏஆர் ரஹ்மானின் தெறிக்கும் பின்னணி இசை, சிம்புவின் ஆக்‌ஷன் ட்ரீட் என வெரைட்டியாக வெளியான இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பத்து தல டீசர் என்ற ஹேஷ்டேக் நேற்று காலை முதலே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதனிடையே, இந்த டீசரை நெட்டிசன்கள் சிலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

 பத்து தல டீசர் வெளியீட்டு விழா

பத்து தல டீசர் வெளியீட்டு விழா

சிம்புவின் பத்து தல டீசர் நேற்று மாலை வெளியானது. இதனை முன்னிட்டு நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் கௌதம் கார்த்திக், இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆனால், பத்து தல ஹீரோவான சிம்பு இதில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வெளிநாட்டில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என சொல்லப்படுகிறது.

 கவனிக்க வைத்த காட்சிகள்

கவனிக்க வைத்த காட்சிகள்

அதேநேரம் பத்து தல ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறும் எனவும், அதில் சிம்பு கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படம் குமரி மாவட்டத்தில் நடப்பதாக உருவாகியுள்ளது. அதன்படி, டீசரின் துவக்கத்திலேயே இங்கே ஏஜிரா ஆட்சி நடக்குதுனு எல்லோருக்கும் தெரியனும் என வசனம் பேசுகிறார் சிம்பு. அதற்கேற்ற வகையில் டீசரில் கம்ப ராமாயணம் புத்தகம் காட்டப்படுகிறது.

 கேஜிஎஃப் வெர்ஷனா பத்து தல

கேஜிஎஃப் வெர்ஷனா பத்து தல

கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் ஹிட்டான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காகதான் பத்து தல உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு மணல் மாஃபியாவாக நடித்துள்ளார். ஆனால், சிம்புவின் காஸ்ட்யூம், மேக்கிங் ஸ்டைல், லொக்கேஷன் போன்றவை கேஜிஎஃப் படத்தை நினைவுப்படுத்துகிறது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். டார்க் ஷேட் கலர் டோன் சினிமாட்டோகிராபி, சிம்புவின் பஞ்ச் வசனம் எல்லாமே அதே சாயலில் தான் உள்ளன.

 நெட்டிசன்கள் ட்ரோல்

நெட்டிசன்கள் ட்ரோல்

அதேபோல், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது. அந்தப் படத்தில் வேஷ்டி, கறுப்பு சட்டையில் வந்து மாஸ் காட்டியிருப்பார் பாலய்யா. பத்து தல படத்திலும் சிம்பு அதேபோன்ற காஸ்ட்யூமில் நடித்திருப்பது தெலுங்கு படம் பார்த்த ஃபீல் கொடுப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஏஆர் ரஹ்மானின் தெறிக்கவிடும் பின்னணி இசை மட்டும் தான் ஒரே ஆறுதலாக உள்ளது.

 90 சதவிகிதம் மாற்றம்

90 சதவிகிதம் மாற்றம்

கிருஷ்ணா இயக்கியுள்ள பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், பத்து தல டீசர் வெளியீட்டில் பேசிய கிருஷ்ணா, கன்னடத்தில் வெளியான முஃப்திக்கும் பத்து தல படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என கூறியுள்ளார். மேலும், சிம்புவின் போர்ஷன் அதிகரிக்கப்பட்டு 90 சதவிகிதம் வரை நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என உறுதியாகக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X