‘’அறம் செய்’’ ஜெயலலிதா கேரக்டரில் திருச்சி சாதனாவா? கடுப்பான இணையவாசிகள்!

சென்னை: பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் 'அறம் செய்' இப்படத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேடத்தில் திருச்சி சாதனா நடித்திருக்கிறார். தமிழக முன்னாள் முதல் அமைச்சர், இரும்பு பெண்மணி கேரக்டரில் இவரா என இணையவாசிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தாராகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் அறம் செய். நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகியோர் முக்கியவேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் மக்களுக்கான முழுமையான அரசியல் பேசும் திரைப்படமாக உருவாகி உள்ளது.

Aram sei Trichy Sadhana

திருச்சி சாதனா: இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ஜீவா, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா, குணா, இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் மற்றும் படத்தில் நடித்த நடிகர்,நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய திருச்சி சாதனா, அறம் செய் திரைப்படத்தின் இசை விழா மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது. இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பூகம்பம் வெடித்தது: அரசியல் சம்பந்தமான ஒரு படத்தை துணிந்து மிக தைரியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். படம் நன்றாக வந்து இருக்கிறது. இந்த விழாவில் படத்தை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தனிப்பட்ட விஷயம் குறித்து பேசி இப்போது பூகம்பம் வெடித்து இருக்கிறது. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவர் சொல்லும் அறிவுரையை கேட்டுக்கொள்வது நல்லது தான்.

ஜெயலலிதாவாக நான்: இந்தப் படத்தில் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த ரோலில் எல்லோரும் நடிக்க மறுத்துவிட்டார்கள். நீ நடிக்கிறாயா என இயக்குநர் என்னிடம் கேட்டார். நான் எப்படி சார் சரியாக வருமா எனக்கு தயக்கமாக இருந்தது. எல்லோரும் அரசியல் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை எடுப்பதாக இயக்குநர் சொன்னார். எனக்கு தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார்.

கடுப்பான நெட்டிசன்ஸ்: இந்த படத்திற்காக ஜெயலலிதா அம்மாவின் நடை, உடை, பாவனைகளை வீடியோ பார்த்து கற்றுக்கொள்ளச் சொன்னார். வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொண்டு நடித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் ஆதரவை இந்த திரைப்படத்திற்கு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், ஒரு இரும்பு பெண்மணி ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் இப்படி பல சிறப்புகளை கொண்ட இந்த கேரக்டரில் திருச்சி சாதனாவா, யார் யார் எந்த கேரக்டரில் நடக்க வேண்டும் என்று ஒருவரைமுறை இல்லையா என இணையவாசிகள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இதில் பேசிய நடிகர் ஜீவா, "பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப் படத்தின் நாயகன். இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். இயக்குநர் கடைசி வரை கதையேச் சொல்லவில்லை. அவர் சொன்னதைத் தான் எல்லோரும் செய்துள்ளோம். பயில்வான் அண்ணன் நல்ல கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X