மன்சூர் அலிகானுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா.. தேரை இழுத்து வீதியில் விட்ட நயினாருக்கு எதிர்ப்பே வரலயே?

சென்னை: மொத்த திரையுலகமும் தற்போது பேசிக் கொண்டிருப்பது விஜய் - த்ரிஷா விவகாரம் குறித்து தான். காரணம் நேற்று அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் குறித்து விமர்சிக்கும் போது, விஜய் முதலில் த்ரிஷாவிடம் இருந்து வெளியே வரவேண்டும். குடும்பத்துடன் நல்ல உறவில் இருக்க வேண்டும். குடும்பத்துடன் நல்ல உறவில் இருப்பவரால் தான் ஒரு கட்சியை சரியாக வழிநடத்த முடியும்" என்று காட்டமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய விமர்சனத்தை வெளிப்படுத்தினார்.

இந்த விமர்சனம் தொடர்பாக பலரும் விவாதித்து வரும் நிலையில் விஜய் மற்றும் த்ரிஷா என இருவரும் அமைதியாக இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சை நிறைந்த பேசு பொருளாக மாறியுள்ளது. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் நடிகர் விஜய். அதேபோல் திருமணமாகதவர் நடிகை த்ரிஷா. விஜய் மற்றும் த்ரிஷாவுக்கு இடையில் நட்பு இருக்கிறது என்று த்ரிஷா மட்டும் இல்லாமல் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர்.

Netizens Ask Questions To Vijay And Trisha For Why They Not Put Opinion Against To BJP TN President Nainar Nagendran

அவர்கள் இருவர் குறித்தும் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததை அடுத்து த்ரிஷா இதுவரை பதிலடி கொடுக்காமல் இருப்பதே பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், த்ரிஷாவுடன் தனக்கு ரேப் சீன்கள் படத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது போல எனக்கு எந்த காட்சியும் இல்லை என்று தெரிவித்தார்.

மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு: இவரது இந்த கருத்துக்கு த்ரிஷா மிகவும் காட்டமாகவும் கோபமாகவும் பதிலடி கொடுத்தார். அதுவும் மன்சூர் அலிகானின் சிந்தனையே அருவருப்பான சிந்தனை என்று எல்லாம் தெரிவித்தார். நடிகர் சங்கத்தில் புகார் அளித்து, மன்னிப்பு கேட்க வைத்தார். ஆனால் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்காமல் உள்ளார். இந்த விஷயத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யும் அமைதியாக இருப்பது இன்னும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Netizens Ask Questions To Vijay And Trisha For Why They Not Put Opinion Against To BJP TN President Nainar Nagendran
ஏன் அமைதி: ஒருபுறம் வலைப்பேச்சு அந்தணன் பேசுகையில், விஜய்க்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ள கருத்து, விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையிலான உறவை பலரும் சந்தேகிப்பதை உறுதி படுத்துவது போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன்களும் சில விஜய் ரசிகர்கள் மட்டுமே பேசிக் கொண்டு இருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட விஜய் மற்றும் த்ரிஷா என இருவரும் கப்சிப் என இருப்பது பலரும் இது தொடர்பாக விவாதிக்க மேலும் வழிவகுப்பது போல உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X