தலைவரே, அந்த வாடகை பாக்கி...: ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: நான் சரியாக இருக்கிறேன் என்று கூறிய ரஜினிகாந்திடம் ஆசிரமம் பள்ளி வாடகையை பற்றி கேட்டுள்ளனர் நெட்டிசன்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் இருக்கும் ராகேவந்திரா மண்டபத்தில் வைத்து நெல்லை மாவட்ட ரசிகர்களை இன்று சந்தித்து பேசினார். ரசிகர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறிய ஒரு விஷயத்தை நெட்டிசன்கள் பிடித்துக் கொண்டனர்.

ரஜினி
ஒரு குடும்பம் நடத்தணும்னா குடும்பத் தலைவன் சரியாக இருக்கணும். இந்த குடும்பத்தை பொறுத்தவரை நான் சரியாக இருக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
வாடகை
ரஜினி பேசிய வசனத்தை கேட்ட நெட்டிசன்கள் அவர் மனைவி நடத்தும் பள்ளியின் வாடகை பாக்கி பற்றி கேட்டுள்ளனர்.
சரி
நீங்க எங்க சரியாக இருக்கிறீர்கள். பள்ளி வாடகை தரவில்லை என்று ஒருத்தவர் சொல்லியிருக்கிறார். அப்படி இருக்கும்போது நீங்கள் சரியாக இருப்பதாக யார் நம்புவார் என்கிறார் ஒரு நெட்டிசன்.
ஐயா
ரஜினி சார் அந்த வாடகை பணம் என்று ஆளாளுக்கு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











