Ajith: நன்றிகள் எல்லாம் சரி.. விஜய்யை அட்டாக் செய்தாரா அஜித்.. அந்த வார்த்தைகள் யாரைக் குறிக்குது?
சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 33 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ரசிகர்களின் அன்பை தனது சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளது நடிகர் விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்யதான் குறிப்பிடப்பட்டுள்ளது என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
பெரும்பாலான நடிகர்களைப் போல அஜித்தும் தொடக்க காலத்தில் ரசிகர் நற்பணி மன்றங்களை நடத்தி வந்தார். அதன் பின்னர் 2000களின் பிற்பகுதியில் தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். இவரது திரை வாழ்க்கையில் இவருக்கு போட்டியான நடிகராக கருதப்பட்டவர் விஜய். அவர்கள் இருவருக்கும் இடையில், நட்பு இருந்தாலும் தொழில் ரீதியான போட்டி என்பது இருந்து வருகிறது. இவர்களின் ரசிகர்களுக்கு இடையில்
இந்நிலையில் அவர் தனது ரசிகர்களுக்கு தான் சினிமாவில் அறிமுகமாகி 33 வருடங்கள் நிறைவுற்றதைத் தொடர்ந்து நன்றி தெரிவித்திருந்தார். இப்படி இருக்கும்போது, அதில் அவர் குறிப்பிட்ட சில வார்த்தைகள் நடிகர் விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்வதைப் போல இருக்கிறதே என்று இணையவாசிகள் பேசி வருகிறார்கள்.

அஜித்தின் அறிக்கையில், " சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்திற்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.
இந்தப் பயணம் எனக்கு எளிதாக இல்லை. இந்தத் துறைக்கு எந்தப் பின்புலமோ அல்லது யாருடைய சிபாரிசோ இல்லாமல்தான் நுழைந்தேன். முழுக்க முழுக்க என் சுய முயற்சியால் மட்டுமே சினிமாத் துறைக்குள் நுழைந்தேன் காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்தது. ஆனால், நான் தளர்ந்து போகவில்லை. முயற்சி செய்தேன், மீண்டு வந்தேன், தொடர்ந்து முன்னேறுகிறேன்! ஏனெனில், விடாமுயற்சி என்பதை வெறுமனே நான் கற்றுக் கொள்ளவில்லை அதை பரிசோதித்து அவ்வண்ணமே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

சினிமாவில் எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றியும் தோல்வியும் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் வெற்றி மீது நான் சந்தேகம் கொள்ளும்போதும் உங்கள் அன்புதான் என்னை மீண்டு வர செய்துள்ளது. இந்த அன்புக்கு என்றும் உண்மையாக இருப்பேன் இந்த அன்பை எப்போதும் இறுகப் பிடித்திருப்பேன் ஆனால் என் பயணம் சினிமாவோடு முடிந்துவிடவில்லை. நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான். நன்றி! உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது நடிகர் விஜய்யைத்தான் மறைமுகமாக சாடியுள்ளார் எனவும் கூறுகிறார். அதாவது, விஜய் தனது ரசிகர் நற்பணி மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியைத் தொடங்கினார். இப்படி இருக்கும் போது, அஜித் தனது நன்றி மடலில் விஜய்யை மறைமுகமாக, விமர்சித்துள்ளார் என இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











