Dhanush: மானத்தை வாங்குறாங்க.. சுத்தி சுத்தி அடிக்கிறாங்க.. ஓம் நமச்சிவாய மட்டும் போதுமா தனுஷ்?

சென்னை: நடிகர் தனுஷ் தான் தற்போது தமிழ் சினிமா உலகில் ஹாட் டாப்பிக்காக உள்ளார். விஷயம் பலருக்கும் தெரிந்தது தான் என்றாலும், தனுஷ் மிகவும் அமைதியாக இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 5 ஸ்டார் கதிரேசன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி, இந்த பிரச்னையில் தனுஷை டார்கெட் செய்யாமல், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணியை டார்கெட் செய்து கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் விபரம் தெரிந்தவர்கள், தனுஷ் ஏன் அமைதியாக இருக்கிறார் என்ற கேள்வியை முன் வைத்து வருகிறார்கள்.

நடிகர் தனுஷ் மற்றும் வெற்றி மாறன் கூட்டணி என்றால், எப்போதும் படம் ஹிட் தான். இப்படியான நிலையில் தயாரிப்பாளர்கள் பலரும் இவர்கள் கூட்டணியில் படம் எடுக்க எப்போதும் தயாராகவே இருப்பார்கள். இப்படியான நிலையில், வெற்றி மாறன் மூலம் தனுஷ் கால்ஷீட் பெற முயற்சித்துள்ளார், தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன். வெற்றிமாறன் அழைத்து வந்துவிட்டதால், தனுஷ் ஓ.கே. சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

Netizens Asking Dhanush Should Be Open About 5 Star Kathiresan Issue To Save RK Selvamani

அதன் பின்னர்தான் பிரச்னையே தொடங்கியது. அதாவது, இரண்டு விதமான சம்பவங்கள் கூறப்படுகிறது. முதலாவது, வெற்றி மாறன் தான் இயக்கவில்லை எனக் கூறியதாகவும், மற்றொன்று தனுஷ் ரூபாய் 5 கோடிகள் அட்வான்ஸ் கேட்டதாகவும். ஆனால் 5 ஸ்டார் கதிரேசன் தரப்பில் இருந்து ரூபாய் 3 கோடிகள் மட்டும் அட்வான்ஸாக கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தனுஷ் சுமார் இரண்டு மாத காலம் காத்திருந்து பார்த்துவிட்டு, அட்வான்ஸ் கொடுப்பதிலேயே இவர்களிடத்தில் பிரச்னை உள்ளது. எனவே நான் இவர்களுக்கு படம் பண்ணவில்லை. எனவே, அட்வான்ஸை திருப்பிக் கொடுக்கிறேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

Netizens Asking Dhanush Should Be Open About 5 Star Kathiresan Issue To Save RK Selvamani

பிரச்னை: ஆனால் 5 ஸ்டார் கதிரேசன் தரப்பில், நாங்கள் அட்வான்ஸ் கொடுத்துள்ளோம், எனவே எங்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் என கூறி வந்துள்ளார்கள். ஆனால் தனுஷோ, வெற்றிமாறனும் இல்லை அதேபோல் கேட்ட அட்வான்ஸ் இல்லை எனக் கூறி கால்ஷீட் கொடுக்க மறுத்து வந்துள்ளார். மேலும் அட்வான்ஸை திருப்பித் தரவும் தயாராக இருந்துள்ளார். இது பிரச்னையாக மாறிய பின்னர், தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பை இரண்டு நாட்கள் நடக்க விடாமல் தடுத்துள்ளனர்.

Netizens Asking Dhanush Should Be Open About 5 Star Kathiresan Issue To Save RK Selvamani

பணம்: பிரச்னை இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்த பின்னர், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் ஃபெப்சி ஆகிய சங்கங்கள் இணைந்து இந்த பிரச்னையை பேசி தீர்க்க முயற்சித்துள்ளார்கள். அப்போது தனுஷ்க்கு கொடுத்த, அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூபாய் 16 கோடிகள் கேட்டதாகவும், தனுஷ் ரூபாய் 8 கோடிகள் தருவதாகவும், ஆர்.கே. செல்வமணி அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலும், பேட்டியிலும் தெரிவித்திருந்தார்.

Netizens Asking Dhanush Should Be Open About 5 Star Kathiresan Issue To Save RK Selvamani

வில்லன்: இப்படியான நிலையில் இப்போது, அவர்கள் பிரச்னையை தீர்த்து சுமூக முடிவு எடுக்க வேண்டும் என முயற்சி செய்த ஆர்.கே. செல்வமணி வில்லனாக மாற்றப்பட்டுள்ளார் என இணையவாசிகள் பேசி வருகிறார்கள். ஆனால் இந்த பிரச்னை இவ்வளவு பூதாகரமாக மாறிய பின்னர், தனுஷ் அல்லது அவர் தரப்பில் இருந்து வேறு யாரோ, இது குறித்து வெளிப்படையாக பேசாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓம் நமச்சிவாயா என பதிவிட்டுள்ளதால் இதுதான் தனுஷின் பதிலா எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே, நயன் விக்கி பிரச்சனையின் போதும், ஓம் நமச்சிவாயா என பதிவிட்டிருந்தார். இப்போதும் அதையே செய்துள்ளதால், தனுஷ் இந்த விவகாரம் குறித்து ஓப்பனாக பேச வேண்டும் என பலரும் பேசி வருகிறார்கள்.

ஆர்.கே. செல்வமணி எழுதிய கடிதத்தில்,”30.9.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தாங்கள் தனுஷ்ஷிடம் Call sheet கேட்டு நீங்கள் புகார் அளிக்கவில்லை. தாங்கள் சில வருடங்களுக்கு முன்னால் தனுஷ்க்கு 3கோடி அட்வான்ஸ் கொடுத்ததாகவும், அதை இப்போது அவர் 16 கோடியாக திருப்பி தர வேண்டும் என்பது தான் தாங்களும், தங்கள் கணவரும் அளித்த புகார்.

16 கோடி: 3 கோடி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, 16 கோடி கேட்பது நியாயம் இல்லை என நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவித்த போது, நாங்கள் வட்டிக்கு வாங்கி, பணம் கொடுத்துள்ளோம். எனவே வட்டி எல்லாம் சேர்த்து இந்த நாள் வரை 16 கோடி ஆகிறது. எனவே தனுஷ்ஷிடம் ரூபாய் 16 கோடி வாங்கி தர வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை. நாம் வட்டி கடை நடத்தவில்லை, சங்கம் நடத்துகிறோம். எனவே இது சரியல்ல என நடிகர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் கணவர் கதிரேசன் நிலையை சம்மேளனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் அவர்களுக்கு எடுத்து கூறி 3 கோடிக்கு மேலாக ஒரு தொகையை பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தோம்.

முயற்சி: நடிகர் சங்கம் நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை செய்து அதிகபட்சம் 3 கோடிக்கு இரண்டு மடங்காக 6 கோடி வரை பெற்று தர முடியும் என தெரிவித்தனர். அதை Five Star நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகிய கதிரேசன் ஏற்கவில்லை. மேலும் படப்பிடிப்பு குழுவினர் இரண்டு நாட்களுக்கு மேலாக தேனியில் காத்திருக்கின்றனர். படப்பிப்பு நடத்தாமல்,சம்மேளன தொழிலாளர்கள் காத்திருப்பதாலும், தயாரிப்பாளருக்கும் நஷ்டம், எங்கள் சம்மேளன உறுப்பினர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்பதை சம்மேளன தலைவராக நான் தெரிவித்தேன்” என குறிப்பிட்டிருந்தார். இப்போது இதுதான் ஆர்.கே. செல்வமணி மீது குற்றச்சாட்டுகள் சுமத்த காரணம் என்ற பேச்சு அடிபடுகிறது.

தனுஷ் தற்போது மிகவும் பிஸியான நடிகராக உள்ளார். கோலிவுட்டில் மட்டும் இல்லாமல் டோலிவுட், பாலிவுட் மட்டும் இல்லாமல் ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், படங்களை இயக்கியும் வருகிறார். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு ராயன் படம் வெளியானது. அது தனுஷ்ஷின் 50வது படம். அதேபோல், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வெளியானது. அடுத்து இவரது இயக்கத்தில் வெளியாக தயாராக உள்ள படம் என்றால், அது இட்லி கடை. இந்த படத்தில் தனுஷ்ஷும் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குபேரா. நேரடி தெலுங்கு படமான இந்த படம் தமிழிலும் வெளியாகும் என்றாலும் இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. அதேபோல் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X