இந்த போட்டோவுக்கு இப்படி கமென்ட்ஸா? எவ்ளோ பணம் கொடுத்தீங்க? சர்ச்சை நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை மீரா மிதுனின் போட்டோக்களையும் அதற்கான கமென்ட்டுகளையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை வேற லெவலில் இறங்கி கலாய்த்திருக்கின்றனர்.
மீரா மிதுன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் புகார்கள் என்றிருந்த மீரா மிதுன் அவ்வப்போது மத்திய மாநில அரசுகளையும் சாடி வந்தார்.
சென்னை போலீஸையே கூண்டோடு மாற்ற வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார் மீரா மிதுன். இதனை பார்த்த நெட்டிசன்கள் நல்ல மனநல மருத்துவரை பாருங்கள் என ஆலோசனை வழங்கினர்.

இதற்கு மேல் என்ன?
இதனை தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் மட்டும் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்தார் மீரா மிதுன். இதற்கு மேல் கவர்ச்சியை காட்ட ஒன்றுமே இல்லை என்ற அளவுக்கு கவர்ச்சியில் கிறங்கடித்துவிட்டார். அரைகுறை ஆடையோடும் ஆடையில்லாமலும் தனது அழகை காட்டி உசுப்பி வருகிறார்.
திட்ட ஒரு கூட்டம்
இவரது போட்டோக்களை ரசிப்பதற்கு என ஒரு கூட்டம் இருந்தாலும் அவரது போட்டோக்களை பார்த்து மரணமாய் கலாய்க்கவும் ஒரு கூட்டம் உள்ளது. அந்த வகையில் அவர் என்ன போட்டோ அல்லது வீடியோ வெளியிட்டாலும் கலாய்த்து வருகின்றனர் சில நெட்டிசன்கள். எல்லை மீறும் அவரது போட்டோக்களுக்கு பச்சையாக திட்டியும் கமென்ட் பதிவிடுகின்றனர் நெட்டிசன்கள்.

செக்ஸி போட்டோக்கள்
நேற்று மீரா மிதுன் வெளியிட்ட இளைஞர் ஒருவருடன் ஆடும் டான்ஸ் வீடியோ ஒன்று பெரும் வைரலானது. அதனை பார்த்து படுமோசமாக திட்டியிருந்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் பிங்க் நிற உடையில் முழுவதுமாய் கவர் செய்தப்படி ஹை ஹீல்ஸில் செம செக்ஸியாக சில போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார் மீரா மிதுன்.
View this post on InstagramBeing of tall stature, it's rare to get a series regular role ☺️
A post shared by Meera Mitun (@meeramitun) on
அழகாக இருக்கிறீர்கள்
அந்த போட்டோ மீரா மிதுன் இதற்கு முன்பு வெளியிட்ட போட்டோக்களை காட்டிலும் பார்ப்பதற்கு சற்று டீசன்ட்டாகவே உள்ளது. இருப்பினும் அந்த போட்டோக்களையும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர். முகத்தில் பெய்ன்ட் கொஞ்சம் குறைவாக இருக்கு என அவரது மேக்கப்பை கிண்டலடித்துள்ளனர். சிலர் அழகாக இருக்கிறீர்கள்.. உங்கள் கண்கள் அழகாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

முகத்தில் அடித்தது போல்
அந்த கமென்ட்டுகளை பார்த்த நெட்டிசன்கள், இதுபோன்று பாஸிட்டிவான கமென்ட்டுகளை பதிவிட எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்று கேட்டுள்ளனர். மேலும் சிலர் இது என்ன டிரெஸ் என்று கேட்டும் கிண்டலடித்துள்ளனர். சில நெட்டிசன்கள் எப்போதும் போல இந்த போட்டோவும் கேவலமாக தான் உள்ளது என முகத்தில் அடித்தது போல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











