அப்பா பேச்சை மீற மாட்டேன்.. வனிதா விஜயகுமாரை மறைமுகமாக அட்டாக் செய்த ஸ்ரீதேவி விஜயகுமார்!
சென்னை: நடிகர் விஜயகுமார் வீட்டில் எந்த அளவிற்கு மகிழ்ச்சி உள்ளதோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் உலா வருகிறது. விஜயகுமார் வீட்டில் இருந்து பிரிந்து வந்து தனது குழந்தைகளை பார்த்துக் கொண்டாலும், வனிதா விஜயகுமார் மீதான கோபம் விஜயகுமாருக்கு மட்டும் இல்லாமல், அவரது குடும்பத்திற்கு இன்னும் குறையாமல் உள்ளது. இப்படியான நிலையில் விஜயகுமாரின் மற்றொரு மகளான ஸ்ரீதேவி விஜயகுமார், தனது திருமணம் குறித்து பேசினார். அப்போது அவரது பேச்சு வனிதா விஜயகுமாரை மறைமுகமாக அட்டாக் செய்வதைப் போல் இருப்பதாக ரசிகர்களும் இணையவாசிகளும் பேசி வருகிறார்கள்.
வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் மிகவும் பிரபலமானவர் மட்டும் இல்லாமல் சர்சைக்குரியவர் எனக் கூறலாம். இவரது குடும்ப விஷயம், இவரை சர்ச்சைகுரியவராக மாற்றிய நிலையில், பிக் பாஸில் இவர் கலந்து கொண்ட பின்னர், சர்ச்சையின் முழு உருவமாக மாறினார். இன்று கதாநாயகனாக திரையில் ஜொலிக்கும் கவினை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாறுமாறாக கேள்வி கேட்டு, அவரை குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது மட்டும் இல்லாமல், அவரை ஆட்டத்தில் இருந்தே வெளியேற்ற வைத்தது.

அதன் பின்னர் கொரோனா காலத்தில் திருமணம் செய்து கொண்டது, அதன் பின்னர் உடனே அவரை பிரிந்தது என, வனிதா விஜயகுமாரைச் சுற்றி ஒரே சர்ச்சைகள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் தனது குடும்ப விஷயத்தில் வனிதா தரப்பில் நியாயம் உள்ளதாகவும், விஜயகுமாரின் கோபம் தான் அவரை அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து வைத்துள்ளது எனவும் கூறுகிறார்கள்.
வனிதா விஜயகுமார்: வனிதா மீது கோபம் இருந்தாலும், வனிதாவின் குழந்தைகள் மீது விஜயகுமாருக்கு என்றுமே பாசம் உள்ளது. அவர்களின் வளர்ச்சியில் விஜயகுமாரும், அவரது குடும்பத்தினரும் என்றுமே அக்கறை கொண்டவர்களாக உள்ளார்கள், என்பதற்கு பல நிகழ்வுகள் சாட்சியங்களாக உள்ளன. இந்நிலையில், நடிகையும் விஜயகுமாரின் மகளுமான ஸ்ரீதேவி விஜயகுமார் தனது திருமணம் தொடர்பாக பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்ரீதேவி: அதாவது, " எங்கள் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எனது திருமணம் தொடர்பாக நிறைய பேர் என்னிடம் கேள்வி கேட்டுள்ளார்கள். அதில் பெரும்பாலானோர் எப்படி டக்குனு அரேஞ்சுடு மேரேஜுக்கு ஒத்துக் கொண்டீர்கள் என்பதுதான். எனது அப்பாவும் அம்மாவும் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறினார்கள். அதாவது, ஒரு வயசு வரைக்கும் தாராளமாக நடி, அதற்குப் பின்னர் கல்யாணம் தான் என எப்போதும் தெளிவாக இருந்தார்கள். அப்பா எது கூறினாலும் நான் அதை மீற மாட்டேன்.
அட்டாக்: எனவே திருமணத்திற்கு நான் ஏற்கனவே தயாராகத்தான் இருந்தேன். அப்பாவும் அம்மாவும் சொல்கிறார்கள் என்றால் கண்டிப்பாக, அது நல்லதுக்கு தான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அந்த நம்பிக்கை இப்போதும் உள்ளது. கடவுள் புண்ணியத்துல எனது திருமண வாழ்க்கை எனக்கு நல்லபடியா அமைந்துவிட்டது" எனக் கூறியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் ஸ்ரீதேவி விஜயகுமாரின் பேச்சு, வனிதா விஜயகுமாரை மறைமுகமாக அட்டாக் செய்வதை போல் உள்ளதாக பேசி வருகிறார்கள். கோலிவுட் வட்டாரத்தில் இந்த விஷயம் தொடர்பாக பரபரப்பாக பேசி வருகிறார்கள். இது பலரது கவனத்தை ஈர்க்கவும் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











