STR - Kamal: விஜய்க்கு SK கிடைத்த மாதிரி.. கமலுக்கு சிம்புவா? சினிமா வாரிசுகளா அறிவிக்கிறார்களா?

சென்னை: தமிழ் திரைத்துறையில் சினிமாவில் ஏதாவது காட்சி வந்தாலே அதனை நிஜ வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். ரசிகர்கள் பொருத்திப் பார்ப்பது மட்டும் இல்லாமல், பலரும் அதனை மிகப்பெரிய முக்கியமான விஷயமாக விவாதிக்கிறார்கள், அது தொடர்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள். அப்படியான சம்பவங்கள் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நடப்பது பலருக்கும் சர்ப்ரைஸாக உள்ளது. இதனால், நடிகர்கள் தங்களது சினிமா வாரிசுகளை மறைமுகமாக அறிவிக்கிறார்களோ என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படம் கடந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பியது. யுவன் சங்கர் ராஜா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய் இரண்டு பாடல்கள் பாடியிருந்தார்.

படத்தின் கிளமாக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சிவகார்த்திகேயனாகவே நடித்திருப்பார். மேலும் அந்த காட்சியில் விஜய், சிவகார்த்திகேயனிடம் கையில் துப்பாக்கியைக் கொடுத்து, 'துப்பாக்கியை புடிங்க சிவா, பார்த்துக்கோங்க சிவா' என்று கூறுவார். அதற்கு, சிவகார்த்திகேயனோ, 'சார் நீங்க வேற ஏதோ முக்கியமான வேலையாக போவதாக தெரிகிறது. நீங்க அதைப் பாருங்க, நான் இங்க பார்த்துக்கொள்கிறேன்' என்று கூறுவார்.

Netizens Asking To Kamal AND Vijay To Their Cinema successor is STR Simbu And SK

விஜய் - சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் இவ்வாறு கூறுவதால், ரசிகர்கள் பலரும் விஜய்க்கு அடுத்து அவரது இடத்திற்கு சிவகார்த்திகேயன் தான் என்று பேசி வந்தார்கள். மேலும் சிவகார்த்திகேயன் பேசிய வசனம், விஜய்யை நோக்கி 'நீங்க அரசியலை பார்த்துக் கொள்ளுங்கள், நான் சினிமாவைப் பார்த்துக் கொள்கிறேன் என்பதை மறைமுகமாக சொல்வதைப் போல இருந்ததாக' ஒரு பேச்சு இப்போதும் உள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூட, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அதான் துப்பாக்கியை வாங்கிட்டாரே, இனி வரும் காலங்களில் பார்க்கலாம் என்று கூறினார்.

கமல் - சிம்பு: இப்படியான நிலையில், நேற்று அதாவது மே 17ஆம் தேதி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் ட்ரைலர் வெளியானது. இதில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலரில், கமல்ஹாசன், சிம்புவை நோக்கி, " இனிமேல் நீயும் நானும் ஒன்னு கடைசி வரைக்கும் என்றும், நான் 8 அடி பாய்ந்தால் நீ 18 டா என்றும், உள்ளே இருந்து நான் பார்த்துக் கொண்டு இருப்பேன், வெளியே அமரும் ( சிம்பு) பார்த்துக்குவான்" என்றும் டயலாக் பேசுகிறார். அதேபோல் சிம்புவோ, "இனிமேல் இங்கு நான்தான் ரங்கராய சக்திவேல்" (கமல்ஹாசன்) என்று கூறுகிறார்.

Netizens Asking To Kamal AND Vijay To Their Cinema successor is STR Simbu And SK

சினிமா வாரிசு: டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. இப்படியான நிலையில் டிரைலரில் இடம் பெற்றுள்ள வசனங்கள் பலருக்கும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. குறிப்பாக கமல்ஹாசன் மறைமுகமாக தனது அரசியல் வாரிசை அறிவிக்கிறாரோ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே விஜய் அரசியலுக்கு செல்வதால் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கையில் விஜய் துப்பாக்கியைக் கொடுத்தார். அதேபோல் தற்போது தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் சிம்புவை தனது சினிமா வாரிசாக அறிவிக்கிறாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X