பிரேம்ஜியின் குடும்பப் பிரச்னை.. குழந்தை பிறந்தும் தீரலயா? தாய்மாமனுக்கு யாராவது எடுத்து சொல்லுங்கப்பா!

சென்னை: நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் மற்றும் இந்து தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதுதான் தற்போது கோலிவுட்டில் மகிழ்ச்சியாக பகிரப்பட்டு வரும் செய்தியாக உள்ளது. இப்படி இருக்கும்போது, பிரேம்ஜியின் மாப்பிள்ளை அதாவது, தனது மனைவியின் தம்பி குழந்தையைப் பார்க்க வந்தாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

அதாவது நடிகர் பிரேம்ஜி அமரன் தான் காதலித்த பெண்ணான இந்துவை கடந்த ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்றது. இதில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை என்ற பேச்சு அப்போது பேசு பொருளாக மாறியது. தமிழ் சினிமாவில் இருக்கும் மொரட்டு சிங்கிள்களில் ஒருவராக அறியப்பட்ட பிரேம்ஜிக்கு திருமணம் என்றதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியது. சென்னை 28 படக்குழுவினர் மொத்தமாக திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

இப்படி இருக்கும்போது, பிரேம்ஜியின் காதல் மனைவியின் தம்பிக்கு அவர்களது திருமணத்தில் விருப்பம் இல்லை என்று திருமணம் முடிந்த பின்னர் அளித்த பேட்டிகளில் தெரிவித்திருந்தனர். பிரேம்ஜி பேச முயற்சி செய்தார். ஆனால் எனது தம்பி பிரேம்ஜியை உதாசினப்படுத்தியதால் தம்பியை ஒரு கட்டத்திற்கு மேல் சமாதானப்படுத்த விரும்பவில்லை. தம்பிக்கு வயது குறைவு என்பதால் கொஞ்சம் முன்கோபியாக இருக்கிறார். எதிர்காலத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். திருமணத்திற்கு கூட தம்பி வராதது வருத்தம் என்று இந்து பேசி இருந்தார்.

Netizens Asking To Premgi Amaren Wife Indhu Brother would Came And Saw The New Born Baby

தாய் மாமன்: இன்று அதாவது நவம்பர் 19ஆம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால், திரையுலகினர் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மொத்த குடும்பத்தினரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்கள். கங்கை அமரனோ, தனக்கு பேத்தி பிறந்துள்ள மகிழ்ச்சியில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தபடி உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறாராம். வெங்கட் பிரபு மருத்துவமனையில் பிரேம்ஜி உடன் இருக்கிறார் என்றும் தகவல்கள் வருகிறது.

குடும்ப விஷயம்: இப்படி இருக்கும்போது சில இணையவாசிகள் பிரேம்ஜியின் மனைவி இந்துவின் தம்பி குழந்தையைப் பார்க்க வந்தாரா என்ற கேள்வியை முன் வைத்து வருகிறார்கள். அதாவது பொதுவாகவே குழந்தை பிறந்தால், குடும்பத்தில் எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் வந்து பார்ப்பார்கள். அப்படி இருக்கும் போது, தாய்மாமன் வந்து பார்த்தாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் அது குடும்ப விவகாரம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X