மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார் மாலத்தீவில் இருந்து ஷேர் செய்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எக்கு தப்பாய் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயக்குமார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார் வனிதா.

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் சண்டக்கோழியாக வலம் வந்தார். சேரனை தவிர மற்ற அனைத்து ஹவுஸ்மேட்ஸிடமும் சண்டை போட்டார்.

ரிலேஷன்ஷிப்..

ரிலேஷன்ஷிப்..

இதனால் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளானார் வனிதா. ஏற்கனவே இரண்டு திருமணம் ஆன வனிதா மூன்று குழந்தைகளுக்கு தாயானார். பின்னர் நடன இயக்குநர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பீட்டர் பால் என்ற விஷுவல் எடிட்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லாக்டவுன் நேரத்தில் கிறிஸ்தவ முறைப்படி மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது.

இதெல்லாம் தேவையா?

இதெல்லாம் தேவையா?

இருவரும் சேர்ந்து லிப்லாக் உட்பட பல ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் வயதுக்கு வந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு இது தேவையா என விளாசினர்.

பகைத்துக் கொண்ட வனிதா

பகைத்துக் கொண்ட வனிதா

பீட்டர் பால் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால், அவருடைய முதல் மனைவியும் வழக்கு தொடர, அடுத்தவர் கணவரை வனிதா அபகரித்து விட்டார் என்றும் விமர்சித்தனர். பீட்டர் பாலுக்காக திரைத்துறை பிரபலங்கள் பலரையும் பகைத்துக் கொண்டார் வனிதா.

குடிக்கு அடிமையானதால்..

குடிக்கு அடிமையானதால்..

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை வனிதா, தனது காதல் கணவரான பீட்டர் பாலை பிரிந்தார். பீட்டர் பால் மீண்டும் மதுவுக்கு அடிமையானதால் இருவரும் பிரிவதாக தெரிவித்தார் வனிதா.

ஹனிமூனா?

ஹனிமூனா?

இந்நிலையில் நடிகை வனிதா, மாலத்தீவில் இருந்து சில போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் புதிய கணவருடன் ஹனிமூனா என கேட்டு வருகின்றனர்.

கவலை இல்லாத ராணி?

கவலை இல்லாத ராணி?

இன்னும் சிலர் கோவாவுக்கு பீட்டர் பாலுடன் சென்றீர்கள், மாலத்தீவுக்கு யாருடன் சென்றுள்ளீர்கள் என்றும் எல்லை மீறி கேட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் கேட்க ஆள் இல்லாத கவலை இல்லாத ராணி என்றும் கேட்க ஆள் இல்லாத தனிக்காட்டு ராணி என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X