Vijay: கேப்டன் நினைவு நாளுக்கு விஜய் இதனால்தான் வரலையா? நடந்தது இதுவா?

சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைந்து நேற்றுடன் அதாவது டிசம்பர் 28ஆம் தேதியுடன் ஒரு வருடம் ஆனது. எனவே அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது நினைவிடத்தில் தேமுதிக சார்பில் குருபூஜை நடத்தப்பட்டது. தேமுதிக சார்பில் பல அரசியல் தலைவர்களுக்கு குருபூஜைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. விஜய் குருபூஜைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வரவில்லை. மேலும் கேப்டன் நினைவு நாள் குறித்து அவரது சமூக வலைதளப் பக்கத்திலும் எதுவும் பதிவிடவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கேப்டன் நினைவு நாளை முன்னிட்டு, நேற்று காலையில் இருந்து பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும், விஜயகாந்த்தின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர். அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலர் அவரது நினைவு நாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதாக சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டனர். இப்படியான நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் எதுவுமே செய்யவில்லை. மேலும் அவர் கேப்டன் நினைவிடத்திற்கு வருவதற்கு காவல்துறை ஒப்புதல் அளிக்கவில்லை என தவெக சார்பில் கூறுகின்றனர்.

vijayakanth vijay

கேப்டன் குருபூஜைக்கு விஜய் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இதற்கும் விஜய்காந்த்தின் மகன் விஜயபிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்தின் சகோதரர் சுதீஷ் என இருவரும் நேரில் சென்று விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கினர். ஆனால் விஜய் வரவில்லை. மேலும் இந்தச் சந்திப்பின்போது விஜய் வருவதாக உறுதி அளித்துள்ளார். உறுதி அளித்தபின்னரும் விஜய் வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன்: மேலும் நேரில் வரமுடியாத நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் அவரது நினைவு நாளுக்கு நினைவஞ்சலி செலுத்துவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டனர். ஆனால் விஜய் அதுவும் செய்யவில்லை. இதனால் கேப்டன் ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் என பலர் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

vijayakanth vijay

விமர்சனம்: அதாவது, தனக்கு சினிமாவில் முதல் வெற்றியைப் பெற்றுத் தந்தவர் கேப்டன். ஆனால் அவரது நினைவு நாளுக்கு கூட விஜய் வரவில்லை. மேலும் அவரது நினைவு நாள் குறித்து சமூக வலைதளங்களில் கூட எதுவும் பதிவிடவில்லை. ஆனால் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு கோவாவுக்கே சென்று வாழ்த்துகள் தெரிவிக்கின்றார். அதேபோல் கீர்த்தி சுரேஷ் இந்தியில் அறிமுகமான பேபி ஜான் படத்தின் ரிலீஸுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார். ஆனால் கேப்டனுக்காக ஒரு பதிவு கூட அவர் போடவில்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காரணம்: இந்த விமர்சனங்களுக்கு இணையதளத்தில் விஜய் ரசிகர்களும், தவெகவினரும் காவல் துறை அனுமதி கொடுக்கவில்லை அதனால்தான் விஜய் வரவில்லை. மேலும் கேப்டன் குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் விஜய் போன் செய்து பேசியதாகவும் கூறி வருகின்றனர்.

vijayakanth vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X