Amala Paul: அமலா பாலுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போக முதல் கணவரின் அப்பாதான் காரணமா?
சென்னை: நடிகை அமலா பால் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தனது வாழ்க்கையின் அமைதியான காலகட்டம் இது என்று அமலா அடிக்கடி கூறுவார். அமலாவின் கணவர் ஜெகத் தேசாய், அவரை முழுமையாகப் புரிந்து கொண்டவர். இருவரும் அறிமுகமான குறுகிய காலத்திலேயே நெருக்கமாகி, திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்டனர். இதற்கு முன்பு நடிகை பல காதல் உறவுகளில் இருந்தபோதும், அவை எதுவும் கைகூடவில்லை.
இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் அமலா பால் திருமண வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கினார். 2014-ல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், 2017-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இது சினிமா உலகில் பெரும் செய்தியாக இருந்தது. ஏ.எல். விஜய் எல்லோருக்கும் பிடித்தமான, எந்தப் சர்ச்சையிலும் சிக்காத இயக்குனராக இருந்தும், ஏன் இந்த விவாகரத்து நடந்தது என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. பலர் அமலா பாலைக் குற்றம் சாட்டினர். அவர் ஒரு குடும்பப் பெண்ணாக வாழ விரும்பவில்லை என்பதே அமலாபால் மீது பலரும் கூறும் குற்றச்சாட்டு.

ரசிகர்கள் விவாதம்: சமீபத்தில் சமூக வலைதளத்தில் இவர்களின் விவாகரத்து குறித்து நடந்த விவாதம் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த விவாதத்தில் பலர் விவாகரத்துக்கு அமலா பாலா அல்லது ஏ.எல். விஜய்யை விட ஏ.எல். விஜய்யின் தந்தை ஏ.எல். அழகப்பனையே குற்றம் சாட்டுகின்றனர். அமலா பாலும் விஜய்யும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். விஜய்யின் குடும்பம் பழமைவாதக் குடும்பம், குறிப்பாக ஏ.எல். அழகப்பன். திருமணத்திற்குப் பிறகு அமலா பால் நடிப்பதை விரும்பவில்லை. திருமணத்திற்கு முன்பு கமிட் செய்த படங்களை அமலா பால் முடித்தார். கரியரில் தொடர விருப்பமில்லை என்று அமலா பால் அப்போது தெளிவுபடுத்தினார். திருமணம் நடைபெற்ற போது அமலாவுக்கு 23 வயது மட்டுமே. விஜய்க்கு அமலாவை விட 12 வயது அதிகம்.
தனுஷ் படம்: திருமணத்திற்குப் பிறகு சில படங்களில் அமலா பால் நடித்தார். தனுஷ் தயாரித்த அம்மா கணக்கு முதலில் வெளிவந்தது. பின்னர் தொடர்ந்து படங்களில் கமிட் ஆனார். விஜய் இதில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றாலும் அழகப்பன் அதிருப்தி அடைந்தார். மருமகளைப் பற்றி அழகப்பன் பேசினார். பல நேரங்களில் ஏ.எல். விஜய்யின் பெற்றோர் அமலா பாலிடம் தவறாகப் பேசியதாகவும் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஒருமுறை, தனுஷ் தயாரித்த அம்மா கணக்கு படத்தில் அமலா பால் நடித்ததுதான் விவாகரத்துக்கு காரணம் என்றும் அழகப்பன் குற்றம் சாட்டினார். அமலா பால் குறித்து சினிமா வட்டாரத்தில் பல வதந்திகள் பரவ அழகப்பனின் பேச்சே காரணம் எனவும் கூறப்படுகிறது.

ஏ.எல். அழகப்பன்: தயாரிப்பாளரான அழகப்பனுக்கு தமிழ் சினிமாவில் செல்வாக்கு உள்ளது. விவாகரத்துக்குப் பிறகு அமலாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு அவரது சினிமா வாழ்க்கையை பாதித்தது. விவாகரத்துக்குப் பிறகு அமலா பாலுக்கு முன்பு போல் தமிழில் சிறந்த படங்கள் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அமலாவை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை என்பதும் கவனிக்கவேண்டியது. இதனால் பலரும் அமலா பால்க்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போக காரணமே ஏ.எல். விஜய்யின் தந்தை அழகப்பன் தான் எனவும் குற்றம் சாட்டுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











