தலைகீழாகத்தான் குதிப்பான் இந்தக் கோட்டைச்சாமி... - இந்தா ஆரம்பிச்சுட்டாய்ங்கள்ல..!
சென்னை : அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. ஹாலிவுட் தரத்தில் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் பார்த்த ரசிகர்களிடமிருந்து பாஸிட்டிவ், நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களைப் பார்க்கமுடிகிறது.
பலர் முதல் காட்சி தொடங்கியபோதே கலாய்க்கத் தொடங்கிவிட்டனர். படம் சிறப்பாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். லாஜிக் மிஸ்டேக் கண்டுபிடித்து வெச்சு செய்யவும் பலர் காத்திருக்கிறார்கள்
பறந்துக்கிட்டே இருக்கார் :
படம் முழுக்க அஜித் அங்கேயும் இங்கேயும் பறந்துகொண்டே இருப்பதாக படம் பார்த்த சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்கள்.
தலைகீழாகத்தான் குதிப்பான் இந்தக் கோட்டைச்சாமி :
ஒரே வரியில் 'விவேகம்' படத்தின் விமர்சனம் எனச் சொல்லி, 'தலைகீழாகத்தான் குதிப்பான் இந்தக் கோட்டைச்சாமி' என அஜித் குதிப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். படம் முழுக்க பறந்துக்கிட்டேவா இருக்காரு?
சேதாரம் ஆகாம வீடுவந்து சேரவும் :
முதல்பாதி பலருக்கு மாஸ் ஆக இருந்ததாகவும், க்ளைமாக்ஸ் நீளமாக இருப்பதாகவும் சிலர் பகிர்ந்திருந்தனர்.
பாவம்... அவரு என்னங்க பண்ணாரு :
'விவேகம்' படத்தை எச்.ராஜா பாராட்டியதாக 'கலாய்' ஸ்டேட்டஸ் போட்டு வம்பிழுத்து விளையாடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து படம் பார்த்ததாக fake post உருவாக்கிச் சிரிக்கவைக்கிறார்கள் நெட்டிஸன்கள்.
தமிழ் ராக்கர்ஸ் அட்மினா :
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், சில்வஸ்டர் ஸ்டேலோன் ஆகியோர் பெயரிலும் ட்வீட் போட்டுக் கதறடிக்கிறார்கள் நெட்டிஸன்கள். கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க பாஸ்!
வேணாம் விட்ருங்க... :
இப்படியே போச்சுனா நல்லாயிருக்காது ஆமா..!
ஒரு பக்கம் இப்படி :
எதை நம்புறதுனே தெரியாமப் போய்க்கிட்டு இருக்கே... யாராச்சும் ஒரு முடிவுக்கு வாங்கப்பா..!


Click it and Unblock the Notifications











