பிரதீப் ரங்கநாதனை மிதிச்சது யாரு? இணையத்தில் பரவும் வீடியோ.. கமெண்ட் செக்‌ஷனைப் பார்க்கனுமே!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக பிரதீப் ரங்கநாதன் உள்ளார். இவர் இயக்கிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தனது முதல் படத்தில் இயக்குநராக பணியாற்றியவர், தனது இரண்டாவது படத்தில், இயக்குநராக மட்டும் இல்லாமல், நடிகராகவும் களமிறங்கி வெற்றி பெற்றார். இவரது நடிப்பில் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள படம், டிராகன். இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசிய வீடியோவைப் பகிர்ந்து கடுமையாக சாடியுள்ளார் இணைய வாசி ஒருவர்.

பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மொத்த படக்குழுவும் கலந்து கொண்டது. குறிப்பாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, படத்தில் நடித்த நடிகர்கள், மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன், தனது உரையின் கடைசி சில நிமிடங்கள் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பான வீடியோவை இணைய வாசி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Pradeep Ranganathan Dragon Pradeep Ranganathan Speech

இணையவாசி பகிர்ந்த வீடியோவில், " இந்த நேரத்தில் சிலர் என்னை அடிக்கவும் செய்கிறார்கள். அதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அது யார்? அவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள் என அதற்குள் போக வேண்டாம். அவர்களுக்கு எல்லாம் ஒன்றுதான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு செடி வளரும் போது சிலர் இலையை பிய்த்து போட்டுவிட்டு போவார்கள். சிலர் காம்பை உடைத்து போட்டுவிட்டு போவார்கள். சிலர் மிதித்துவிட்டு போவார்கள்.

Pradeep Ranganathan Dragon Pradeep Ranganathan Speech

மாஸ் ஸ்பீச்: ஆனால் அந்தக் காலகட்டத்தில் எல்லாம் செடியின் வேர் கீழே வலிமையாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அந்த செடி மட்டும் இப்போது கொடுக்கிற வலி அனைத்தையும் தாங்கி விட்டால், அந்த செடி மிகப்பெரிய மரமாக வளர்வதை யாராலும் தடுக்க முடியாது" என பேசினார். அவரது பேச்சுக்கு அந்த அரங்கில் கூடியிருந்த அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்கள் அவரது இந்தப் பேச்சை மாஸ் ஸ்பீச் எனக் கூறி வருகிறார்கள்.

Pradeep Ranganathan Dragon Pradeep Ranganathan Speech

யாரு மிதிச்சா? : இந்த வீடியோவைப் பகிர்ந்து, இணைய வாசி ஒருவர், பிரதீப் ரங்கநாதனை மிகவும் கடுமையாக சாடியுள்ளார். அதாவது இந்த வீடியோவைப் பகிர்ந்து, அதற்கு, கேப்ஷனாக, "நீ எப்ப வளந்த..உன்ன யார் மிதிச்சது..மொதல்ல யார்ரா நீ ?" என காட்டமாக பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவுக்கு பிரதீப் ரங்கநாதனின் ரசிகர்களும் பிரதீப் ரங்கநாதனின் ஹேட்டர்களும் கமெண்ட் செக்‌ஷனில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆபாச கமெண்ட்ஸ்: குறிப்பாக இணைய வாசி ஒருவர், " உண்மையாவே இவனுங்களுக்கு வாழ்க்கையோட அவமானங்களோ கஷ்டமோ தெரியாது போல எவனோ கமெண்ட் போட்டா கூட ஒரு பக்கத்துக்கு வசனம் பேசுறானுங்க" என கமெண்ட் போட்டுள்ளார். அதேபோல் மற்றொருவர், " டேய் யார் டா நீ கோமாளி.. இப்படி எல்லாம் பேசுனா நீ சிவகார்த்திகேயன் ஆகிடுவியா.. அவனையே இப்படி பேசுனா தூக்கி போட்டு மிதிப்பானுங்க.. நீ எல்லாம் ஒரு ஆளே கிடையாது.. போ அங்குட்டு.. அட்டென்ஷன் சீக்கிங் பைத்தியம் 🤧🤧" என பதிவிட்டுள்ளார். மேலும் பலர் மிகவும் ஆபாசமாக கமெண்ட் செக்‌ஷனை நிரப்பி வருகிறார்கள்.

Pradeep Ranganathan Dragon Pradeep Ranganathan Speech

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X