ஆராத்யா பாவம், தொப்புள் கொடியை அத்துவிடுங்க: ஐஸ்வர்யா ராயை விளாசிய நெட்டிசன்ஸ்
Recommended Video
மும்பை: ஆராத்யாவால் நெட்டிசன்கள் மீண்டும் ஐஸ்வர்யா ராயை வறுத்தெடுத்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு தனது மகள் ஆராத்யா என்றால் உயிர். எங்கு சென்றாலும் ஆராத்யாவின் தோளில் ஒரு கையை போட்டு, அவரின் மற்றொரு கையை பிடித்துக் கொண்டு தான் செல்வார் ஐஸ்வர்யா.

ஆராத்யா பாவம், அவரை தானாக நடக்க விடுங்க ஐஸ்வர்யா. யார் துணையும் இல்லாமல் நடக்கும் வயது வந்துவிட்டது ஆராத்யாவுக்கு. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வந்த அப்பா மாதிரி நடந்து கொள்ளாதீர்கள் என்று நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராயை அண்மையில் ஓவராக விளாசினார்கள்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் மகளுடன் சாப்பிட மும்பையில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்றார். வழக்கம் போன்று ஆராத்யாவின் கையை பிடித்துக் கொண்டு தான் சென்றார் ஐஸ்வர்யா. அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் ஐஸ்வர்யா ராயை திட்டத் துவங்கிவிட்டனர்.
நேற்று பிறந்த கரீனா கபூரின் மகன் தைமூர் எல்லாம் தனியாக நடக்கிறார். ஆனால் ஆராத்யாவை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள். அந்த குழந்தை பாவம், இப்படியா படுத்துவது என்று நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராயை திட்டியுள்ளனர்.
ஆராத்யாவின் தொப்புள் கொடியை இன்னும் கட் செய்யவில்லை ஐஸ்வர்யா. அதை என்று வெட்டுகிறாரோ அன்று தான் ஆராத்யா சுயமாக இருக்க முடியும். இதையாவது உங்களின் மகளுக்காக செய்வீர்களா என்று ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கேமராக்கள், மீடியா எல்லாம் ஆராத்யாவுக்கு நன்கு பழக்கமாகிவிட்டது. அவருக்கு இஷ்டம் இருந்தால் சிரித்தபடி போஸ் கொடுப்பார், இல்லை என்றால் கிண்டல் செய்வார். மீடியாவை எப்படி எதிர்கொள்வது என்பதை ஆராத்யா தெரிந்து வைத்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ராய் தான் அவருக்கு சுதந்திரம் கொடுப்பது இல்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
நல்ல வேளை பள்ளிக் கூடத்தில் பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி மட்டும் கொடுத்திருந்தால் ஆராத்யாவின் கையை பிடித்துக் கொண்டே பள்ளிக்கும் சென்றிருப்பார் ஐஸ்வர்யா என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். அவர் மகள், அவர் இஷ்டம், நாம் யார் சொல்வதற்கு.


Click it and Unblock the Notifications











