சம்பாதிக்க மட்டும் இந்தியா வேணுமா?: ரஜினி வில்லனை திட்டும் நெட்டிசன்ஸ்
மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை நாள் கணக்காக நெட்டிசன்கள், அரசியல் கட்சியினர் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் பிறந்து, வளர்ந்த அக்ஷய் குமார் கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். லோக்சபா தேர்தலின்போது அவர் வாக்களிக்க முடியாதது தெரிந்து நெட்டிசன்கள் திட்டினார்கள்.
இந்நிலையில் கனடா தான் தன் சொந்த வீடு என்று அக்ஷய் தெரிவித்த பழைய வீடியோவை தேடி எடுத்து மக்கள் விளாசுகிறார்கள்.
அக்ஷய்
நான் கனடா குடியுரிமை உள்ளவன் என்பதை எப்பொழுதுமே மறைத்தது இல்லை. நான் கடந்த 7 ஆண்டுகளாக கனடாவுக்கு செல்லவில்லை. என் குடியுரிமை பற்றி தேவை இல்லாமல் பேசுவது வருத்தம் அளிக்கிறது என்று அக்ஷய் ட்வீட்டியதை பார்த்தவர்கள் அப்படி பேசினவர் தானே நீங்கள் என்று கனடாவை தன் வீடு என அவர் கூறிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
மோடி
மோடி சொன்னார் என்று இந்திய மக்களை வாக்களிக்க வலியுறுத்தியதை தான் இப்படி கிண்டல் செய்துள்ளார்கள்.
தகுதி இல்லை
கனடா நாட்டு குடிமகனான அக்ஷய் குமாருக்கு தேசிய விருது கொடுக்கக் கூடாது. மோடி ஆதரவாளர். கனடாவுக்கு செல்லுங்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
அனுபம் கேர்
அக்ஷய் குமார், நீங்கள் யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று சீனியர் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











