twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குவாட்டர், ஸ்கூட்டர் இல்ல அப்ப மேட்டர்: கமலை கேட்ட பாஜக நிர்வாகியை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

    By Siva
    |

    Recommended Video

    குவாட்டர், ஸ்கூட்டர் இல்ல அப்ப மேட்டர்: நாராயணன் திருப்பதி

    சென்னை: மேட்டர் பற்றி பேசிய பாஜக நிர்வாகியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

    உலக நாயகன் கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியுள்ளார். ஓட்டுக்கு பணம் எல்லாம் தரவே மாட்டேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.

    இலவச ஸ்கூட்டர், குவாட்டர் எதுவும் கிடையாது என்று கமல் கூறியுள்ளார்.

    மேட்டர்

    குவாட்டர், ஸ்கூட்டர் கிடையாது - கமல்ஹாசன் .

    மேட்டர்? என பாஜக நிர்வாகியும், டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவருமான நாராயணன் திருப்பதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    திட்டு

    பாஜகவில் இருந்தால் மேட்டர் நினைவாகவே இருப்பார்கள் போன்று. அது சரி சட்டசபையிலேயே பலான படம் பார்ப்பவர்களாச்சே என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

    தேவை

    யாருக்கு என்ன தேவையோ அத கேட்கறீங்க... இதுலாம் நெட்லயே ஈஸியா கிடைக்குமே சார்... இப்படி பப்ளிக்கா கேட்டிருக்க வேணாம்... ப்ச்... என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

    தமிழிசை

    @DrTamilisaiBJP உங்கள் கவனத்திற்கு.பாஜக கட்சிக்கு எதிரிங்க வெளியில இல்ல உள்ளயே தான் இருக்காங்க.கேட்டா மேட்டர்னு நான் பணத்தை சொன்னேன்னு சொல்லுவாரு.இதுல spokesperson வேற. .வெளங்கிடும் என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

    பேச்சு

    வயதுக்கு ஏற்றது போன்று பேசுங்க சார் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

    ஸ்லீப்பர் செல்

    நாராயணா .. நீங்க காங்கிரஸ் ஓட ஸ்லீப்பர் செல் ஆ ?? பிஜேபி அ டேமேஜ் பண்ற மாதிரியே பேசுறிங்களே எப்பவுமே !!! என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Netizens blast BJP functionary Narayanan Thirupathy for tweeting ill of actor turned Makkal Needhi Maiam head Kamal Haasan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X