பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிடி: வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்
Recommended Video

சென்னை: பாகிஸ்தானியர்களை பாராட்டிய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பொது மக்கள் உதவி வருகிறார்கள்.
மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் நிதியுதவி அளித்துள்ளனர்.
துபாய்
துபாயில் வேலை பார்க்கும் பாகிஸ்தானியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். இது குறித்த செய்தியை பார்த்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி ட்விட்டரில் வாவ் என்று கூறி அவர்களை பாராட்டியுள்ளார்.
நெட்டிசன்ஸ்
முப்படைகள் செய்யும் வேலையை பாராட்டாமல் பாகிஸ்தானியர்களை பாராட்டுவதா என்று நெட்டிசன்கள் டிடியை விளாசியுள்ளனர்.
கேரளா
பாகிஸ்தானியர்களை பின்னர் வாழ்த்தலாம் முதலில் நம் ராணுவத்தினரை வாழ்த்துங்கள். ஆமாம், கேரளாவுக்கு நீங்கள் என்ன உதவி செய்தீர்கள் என்று நெட்டிசன்கள் டிடியிடம் கேட்டுள்ளனர்.
தவறு
அது எப்படி பாகிஸ்தானியர்களை பாராட்டலாம் என்று ஆளாளுக்கு டிடி மீது கோபப்படுகிறார்கள். அட பாகிஸ்தானியர்கள் கூட இந்தியர்களுக்கு உதவி செய்கிறார்களே என்று வியந்து டிடி பாராட்டியிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











