அப்பா வயசு நடிகருக்கு ஜோடியாகும் அளவுக்கு என்ன அவசரம்: கீர்த்தியை விளாசிய நெட்டிசன்ஸ்
Recommended Video
சென்னை: அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகும் அளவுக்கு என்ன அவசரம் என்று கீர்த்தி சுரேஷை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் நாகர்ஜுனாவை வைத்து மன்மதுடு 2 தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.
மேலும் நாகர்ஜுனாவின் மருமகளான சமந்தா கவுரவத் தோற்றத்தில் வருகிறார். சமந்தா ஏற்கனவே தனது காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டார்.
கீர்த்தி சுரேஷ்
சமந்தாவை அடுத்து கீர்த்தி சுரேஷும் மன்மதுடு 2 படத்தில் கவுரவத் தோற்றத்தில் வருகிறார். அவர் நாகர்ஜுனாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் கவுரவத் தோற்றத்தில் நடிப்பது குறித்து இயக்குநர் ராகுல் ரவீந்திரன் ட்வீட் செய்தார். அதை பார்த்த கீர்த்தி இப்படி ஒரு வாய்ப்பு அளித்ததற்கு நன்று தெரிவித்து கமெண்ட் போட்டுள்ளார்.

நாகர்ஜுனா
அப்பா வயது நடிகருக்கு போய் ஜோடியாக நடித்திருக்கிறீர்களே, அப்படி என்ன அவசரம் என்று நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷை விளாசியுள்ளனர். உங்கள் வயதுக்கு ஏற்ற நடிகருடன் நடிங்க ஆனால் இது போன்று அப்பா, தாத்தா வயது நடிகருடன் நடிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கவுரவத் தோற்றத்தில் வருபவர்கள் குறித்து அறிவிக்க வேண்டாம், அதை ரகசியமாக வைத்தால் படம் பார்க்கும் போது நன்றாக இருக்கும் என்று ராகுலிடம் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் எடை
கீர்த்தி சுரேஷ் பாலிவுட் செல்வதால் டயட் இருந்து, ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து தனது உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டார் என்று கூறி ஒரு புகைப்படம் வெளியானது. அதில் அவர் கன்னம் ஒட்டிப் போய் ஒல்லிக்குச்சியாக இருந்தார். இந்நிலையில் அந்த புகைப்படம் வெளியான வேகத்தில் மன்மதுடு2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட கீர்த்தி பழையபடி பூரிக்கன்னத்துடன் காணப்படுகிறாரே என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

இஷ்டம்
கீர்த்தி சுரேஷ் அவரின் உடல் எடையை குறைப்பதும், அதிகரிப்பதும் அவரின் இஷ்டம். ஆனால் அவர் எடையை குறைத்தாலும் சரி, கூட்டினாலும் சரி அதற்காக அவரை சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள். கீர்த்தி சுரேஷின் புதுப் புகைப்படம் வெளியானாலே மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கான்செப்ட் கிடைத்துவிட்டது என்று குஷியாகிவிடுகிறார்கள். பாவம்பா, அந்த பொண்ணு.


Click it and Unblock the Notifications











