மோடியை கழுவிக் கழுவி ஊத்தும் மக்கள்: பத்த வச்சிட்டீங்களேம்மா ப்ரியங்கா சோப்ரா
Recommended Video

மும்பை: ப்ரியங்கா சோப்ராவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் பிரதமர் மோடியை விளாசியுள்ளனர்.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
மேடையில் 10 நிமிடங்கள் இருந்த மோடிக்கு ப்ரியங்கா தனது அமெரிக்க உறவுகளை அறிமுகம் செய்து வைத்தார்.

விமர்சனம்
ப்ரியங்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோடியை பார்த்த மக்கள் நாட்டு பிரச்சனையை தீர்க்க நேரம் இல்லை இதற்கு மட்டும் நேரம் இருக்கிறதோ என்று விமர்சித்தனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களோ, மோடிக்கு இங்கு வந்து பாதிப்புகளை பார்க்க நேரம் கிடைக்கவில்லை. பாவம், ரொம்ப ஏழையான ப்ரியங்காவை பார்த்து பேச மட்டும் நேரம் கிடைத்துள்ளது என்று விளாசியுள்ளனர்.
கோபம்
இதற்கு மட்டும் நேரம் இருக்கிறதா மோடி ஜி?. ஏற்கனவே மோடியை ப்ரிய்ங்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பார்த்து கடுப்பில் இருந்த மக்கள் அவர் போட்ட ட்வீட்டை பார்த்து மேலும் கடுப்பாகிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











