காசுன்னா என்ன வேணும்னாலும் செய்வீங்களா?: சமந்தா மாமாவை விளாசும் நெட்டிசன்ஸ்

By Siva

ஹைதராபாத்: பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் நாகர்ஜுனாவை நெட்டிசன்கள் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்கினார். இந்நிலையில் விரைவில் துவங்கவிருக்கும் மூன்றாவது சீசனை நாக்ரஜுனா தொகுத்து வழங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் நாகர்ஜுனா தான் தொகுத்து வழங்குகிறார் என்று விபரம் அறிந்தவர்கள் உறுதியாக கூறுகிறார்கள்.

Netizens blast Nagarjuna for Bigg Boss 3

முன்னதாக அனுஷ்கா அல்லது சிரஞ்சீவி தொகுத்து வழங்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நாகர்ஜுனா முன்பு கொடுத்த பேட்டி பற்றி தற்போது விமர்சிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

தேவ்தாஸ் பட விளம்பர நிகழ்ச்சியின்போது நாகர்ஜுனா பிக் பாஸ் பற்றி பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது,

தயவு செய்து பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். எனக்கு பிக் பாஸின் கான்செப்ட்டே பிடிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள். எனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது என்றார்.

அவர் முன்பு அளித்த பேட்டி பற்றி தற்போது விமர்சிக்கிறார்கள். காசு பணம் துட்டு மணி மணி என்றால் கருத்தை மாற்றிக் கொள்வீர்களா நாகர்ஜுனா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அண்மையில் வெளியான மன்மதுடு 2 டீஸரில் மகள் வயது பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததால் நாகர்ஜுனா விமர்சனத்திற்குள்ளானார். இந்நிலையில் அவர் பிக் பாஸ் பற்றிய விமர்சனத்தால் மீண்டும் பேசப்படுகிறார்.

பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கி வரும் மன்மதுடு 2 பட வேலைகளில் நாகர்ஜுனா பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மன்மதுடு 2 டீஸரை பார்த்தவர் சின்மயியை விளாசினார்கள். ஊருக்கு ஒரு நியாயம், உங்கள் கணவரின் படம் என்றால் ஒரு நியாயமா என்று அவரிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X