பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியா?: அட்லி, மனைவியை திட்டும் நெட்டிசன்ஸ்
சென்னை: ப்ரியா போட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரையும், அவரின் கணவரான இயக்குநர் அட்லியையும் திட்டியுள்ளனர்.
இயக்குநர் அட்லியின் மனைவி ப்ரியா பெக்கி என்கிற நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார். அந்த பெக்கியின் 3வது பிறந்தநாளை தனது கணவருடன் சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடினார் ப்ரியா.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படங்களை ப்ரியா ட்விட்டரில் வெளியிட்டார்.
நாய்க்குட்டி
ப்ரியாவுக்கு பெக்கி என்றால் ரொம்ப இஷ்டம். இது அட்லிக்கு மட்டும் அல்ல அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் தெரியும். தன் வாழ்வில் எடுத்த சிறந்த முடிவே பெக்கியை வளர்ப்பது தான் என்றெல்லாம் ப்ரியா உணர்ச்சிவசப்பட்டு ட்வீட் போட்டார். இந்நிலையில் ப்ரியா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி அவரையும், அட்லியையும் விளாசியுள்ளனர்.
குழந்தை
அட்லி, ப்ரியாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றது. அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ப்ரியாவின் ட்வீட்டை பார்த்தவர்களோ, குழந்தையை கொஞ்ச வேண்டிய நேரத்தில் நாய்க்குட்டியை கொஞ்சுகிறாரே என்று விமர்சித்துள்ளனர். குழந்தை பெற்றுக் கொள்வதும், சும்மா இருப்பதும் அவரவர் விருப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஷன்
பிரபலங்கள் நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடுவது ஃபேஷனாகிவிட்டது. பணம் இருந்தால் அதை இது போன்று வீணாக்காமல் ஏழை குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுக்கலாம். முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உதவலாம். சமூக அக்கறை கொண்ட படங்களை எடுக்கும் அட்லிக்கு புத்தி எங்கு போனது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பணம்
பணம் இருந்தால் நாய்க்கு என்ன பேய்க்கு கூட பிறந்தநாள் கொண்டாடலாம். எல்லாம் பணத் திமிர். நாயை போய் குழந்தை என்று சொல்வது எல்லாம் ஓவர் ப்ரியா. தயவு செய்து இனி இது போன்று செய்யாதீர்கள் என்று பலர் தெரிவித்துள்ளனர்.
பிகில்
ப்ரியாவின் ட்வீட்டை பார்த்த சிலர் பெக்கிக்கு பிறந்தநாள் கொண்டாடியது போதும் போய் உங்கள் கணவரை விஜய்யின் பிகில் பட அப்டேட் கொடுக்கச் சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











