பண மதிப்பிழப்பு: மோடியை விட ஆர்.ஜே. பாலாஜி தான் ரொம்ப பாவம் #DontPanic #Demonetisation
சென்னை: பண மதிப்பிழப்பு முடிவை பாராட்டி ஆர்.ஜே. பாலாஜி கடந்த ஆண்டு வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அவர் அறிவிப்பை வெளயிட்டுவிட்டு ஜப்பானுக்கு சென்றுவிட்டார்.
இங்கு மக்கள் செலவுக்கு பணம் இல்லாமல் பிச்சைக்காரர்கள் போன்று திரிந்தார்கள்.

வங்கிகள்
பல ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை. வங்கிகளில் மணிக்கணக்கில் வரிசையில் நின்று பரிதாபமாக உயிர் இழந்தவர்கள் பலர். இப்படி மக்கள் அல்லாட காரணமான பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது.
ஆதரவு
செம, தைரியமான முடிவு, மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று பண மதிப்பிழப்பு குறித்து ஆர்.ஜே. பாலாஜி பெருமையாக பேசி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

எங்கே?
புதிய இந்தியா பிறக்கிறது என்று 8.11.2016 அன்று சொன்னீங்களே, எங்கய்யா பிறந்துச்சு என்று நெட்டிசன்ஸ் ஆர். ஜே. பாலாஜியை கேட்டுள்ளனர்.
கோபம்
இன்றைய தினத்தை கருப்பு தினமாக கருதும் பலர் ஆர்.ஜே. பாலாஜியை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











