நாடே கதறிக்கிட்டு இருக்கு, இப்போ தேனிலவு போட்டோ முக்கியமா?: ரஜினி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்
சென்னை: தேனிலவு புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்தை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், விசாகன் வணங்காமுடிக்கும் கடந்த 11ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து அவர்கள் தேனிலவுக்கு ஐஸ்லாந்துக்கு சென்றுள்ளார்கள்.
சவுந்தர்யா
ஐஸ்லாந்தில் கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் சவுந்தர்யா. இதை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்து சவுந்தர்யாவை விளாசியுள்ளனர்.
தாக்குதல்
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இந்நிலையில் தேனிலவு புகைப்படங்களை வெளியிடுவதா என்று நெட்டிசன்கள் சவுந்தர்யாவை திட்டியுள்ளனர்.
வீரமரணம்
தேனிலவுக்கு போவதை தவறு என்று சொல்லவில்லை. நம் வீரர்கள் வீரமரணம் அடைந்த இந்த நேரத்தில் தேனிலவு புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று தான் கூறுகிறோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
நாடு
நாடே கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தேனிலவு புகைப்படங்களை வெளியிடுவதா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











