Kanguva: படத்தோட ரிசல்ட்டை டைட்டிலிலேயே வச்சிட்டாரா சிவா.. ஏதாவது உள்குத்து குறியீடா?

சென்னை: சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 3டி திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு 'கங்குவா' என தலைப்பிட்டுள்ளனர்.

கங்குவா என்றால் என்ன அர்த்தம் என ஒரு பக்கம் ரசிகர்கள் தேடி வருகின்றனர். பாகுபலி என்கிற டைட்டில் அனைத்து மொழிகளிலும் பாகுபலி என்று வந்ததை போலவே கங்குவா டைட்டிலும் யுனிக்காக உருவாகி உள்ளது.

குதிரை மீது மாஸ்க் அணிந்து கொண்டு போர் வீரனாக சூர்யா பறக்கும் காட்சிகளும், கழுகு, குதிரை என விலங்குகள் அதிகம் இடம்பெறும் பிரம்மாண்டமான படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

Netizens brutally trolled Suriyas 42nd movie title Kanguva

தம்பிக்கு பொன்னியின் செல்வன்: ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி பிரம்மாண்டமான படமான பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ளார். இந்நிலையில், ஏழாம் அறிவு படத்துக்கு பிறகு சாகச கதையில் நடிகர் சூர்யா நடிக்க உள்ள கங்குவா படம் பெரிய பட்ஜெட்டில் சிஜி ஒர்க் நிறைந்த படமாக உருவாகி வருகிறது.

பாகுபலிக்கு போட்டி: டோலிவுட்டில் வெளியான பாகுபலி படம் இந்திய சினிமாவுக்கே சமீபத்திய பெஞ்ச் மார்க்காக அமைந்த நிலையில், பல்வேறு மொழிகளில் அதே போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், பாகுபலி படத்துக்கு தரமான போட்டியாக சூர்யா 42 படமான கங்குவா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Netizens brutally trolled Suriyas 42nd movie title Kanguva

தியேட்டரில் வசூல் வேட்டை கன்ஃபார்ம்: வரலாற்று படமாக எடுத்தாலே ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி இருந்தது. இம்மாத இறுதியில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் டைரக்ட்டாக ஓடிடியில் வெளியாகின. கடைசியாக தியேட்டரில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் பெரிதாக போகவில்லை. இந்நிலையில், தியேட்டர் வசூலை இந்த கங்குவா படம் மிகப்பெரிய அளவில் வாரிக் குவிக்கும் என்பது உறுதி ஆகி உள்ளது. ப்ரீ ரிலீஸ் பிசினஸும் வேறலெவலில் சென்றுக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

Netizens brutally trolled Suriyas 42nd movie title Kanguva

டைட்டிலிலேயே ரிசல்ட்: கங்குவா என சூர்யா 42 படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், நெட்டிசன்கள் அதனை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். அதிலும், ஒரு சியான் விக்ரம் ரசிகர் ரொம்பவே டீட்டெய்லாக சென்று டீகோடிங் செய்த நிலையில், கங்குவா டைட்டிலில் நாமம் சிம்பிள் இருப்பதை கண்டுபிடித்த அவர், படத்தின் ரிசல்ட் இப்போதே தெரிந்து விட்டது என்றும் இயக்குநர் சிறுத்தை சிவா சிம்பாலிக் குறியீடாக இதை வைத்துள்ளாரா? என்றும் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

யூவி க்ரியேஷன்ஸ் இணைந்து தயாரிப்பதால் யூவி இணைந்து வருவது போல அந்த டைட்டில் டிசைன் உள்ளது என்றும் படம் பெரியளவில் பிளாக்பஸ்டர் அடிக்கப் போவதை வெயிட் செய்து வேடிக்கை பாருங்க ஹேட்டர்ஸ் என சூர்யா ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X