Kangana ranawat: கங்கனா ரனாவத்தின் இரட்டை வேடம்.. சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
மும்பை: சண்டிகர் விமானநிலையத்தில் பாலிவுட் நடிகையும் மண்டி தொகுதி எம்பியுமான கங்கனா ரனாவத்தை CISF பெண் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. குல்விந்தர் தன்னுடைய தரப்பு நியாயத்தை கூறிய நிலையில் அவருக்கு அதிகமான சப்போர்ட் கிடைத்து வருகிறது.
இதையடுத்து கொலைக் குற்றவாளிக்கு கூட அவரது தரப்பில் ஒரு நியாயம் இருக்கும். அதற்காக அவரை தண்டிக்காமல் விட முடியுமா என்று கங்கனா கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும்வகையில் முன்னதாக கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்திற்கு ஆதரவாக கங்கனா ரனாவத் போட்டிருந்த எக்ஸ் தள பதிவை தற்போது நெட்டிசன்கள் கையில் எடுத்துள்ளனர்.

நடிகை கங்கனா ரனாவத்: நடிகை கங்கனா ரனாவத் பிரபல பாலிவுட் நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர். குயின் என இவரை ரசிகர்களை பாராட்டி வருகின்றனர். தமிழிலும் தலைவி, சந்திரமுகி 2 படங்களில் நடித்துள்ள கங்கனா ரனாவத், நெகட்டிவ்வான விமர்சனங்களையே பெற்றிருந்தார். தற்போது மண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகவும் இவர் மாறியுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சண்டிகர் விமான நிலையத்தில் CISF கான்ஸ்டபிள் ஒருவர் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அறை வாங்கிய கங்கனா: தன்னுடைய தாயை இழிவாக பேசியதற்காக தான் கங்கனாவை அடித்ததாக குல்விந்தர் சிங் என்ற அந்த பெண் காவலர் கூறியிருந்தார். 100 ரூபாய் காசிற்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பதாக கங்கனா தெரிவித்திருந்த நிலையில், அந்தப் போராட்டத்தில் தன்னுடைய அம்மாவும் இருந்ததாகவும் 100 ரூபாய்க்காக போராட்டத்தில் பங்கேற்க முடியுமா என தன்னுடைய ஆத்திரத்தை அந்த காவலர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், அந்த கான்ஸ்டபிளுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
கங்கனா காட்டம்: இந்நிலையில் கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பல குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் அதை செய்வதற்கு ஒரு நியாயம் இருக்கும் என்றும் ஆனாலும் அவர்களை குற்றவாளிகளாகவே கருத வேண்டும் என்றும் கங்கனா ரனாவத் கோபத்துடன் பேசியிருந்தார். குல்விந்தருக்கு ஆதரவாக பேசுபவர்கள் தங்களுடைய மனநலனை சிறப்பாக்கிக் கொள்ள யோகா போன்றவற்றை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் கங்கனாவிற்கு எதிரான கருத்துக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டில் வில் ஸ்மித்திற்கு ஆதரவாக கங்கனா பேசியதை நெட்டிசன்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
கங்கனாவின் இரட்டை வேடம்: இதன்மூலம் கங்கனாவின் இரட்டை வேடம் வெளிப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் தன்னுடைய மனைவி குறித்து அவதூறாக பேசிய கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்திற்கு ஆதரவாக அப்போது கங்கனா பேசியிருந்தார். மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக என்னுடைய அம்மா அல்லது சகோதரியை இழிவுப்படுத்தினால் தானும் வில் ஸ்மித் வழியிலேயே கிறிஸ் ராக்கை அறைந்திருப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அவரது இந்த பதிவை வெளியிட்டுள்ள நெட்டிசன்கள், வில் ஸ்மித் போலவே தன்னடைய அம்மாவை இழிவுப்படுத்திய கங்கனாவை குல்விந்தர் அறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திண்டாட்டத்தில் கங்கனா: ஆனால் தற்போது குல்விந்தருக்கு ஆதரவாக பேசுபவர்களை மனநோயாளிகள் போல கங்கனா பேசியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள நெட்டிசன்கள், கங்கனா இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்துள்ளனர். தன் மீது தவறை வைத்துக் கொண்டு மற்றவர்களை குற்றம் சாட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் விவகாரத்தில் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ள கங்கனா ரனாவத், தான் எம்பி ஆன சந்தோஷத்தை கொண்டாடக் கூட வழியில்லாமல் திண்டாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











