வெறித்தனம்.. கொல மாஸ்... வேற லெவல்... மாநாடு ட்ரெயிலரை கொண்டாடித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் ட்ரெயிலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காட்சி தயாரித்துள்ளார்.
மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரசியமான ட்ரெயிலர்
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. மாநாடு படத்தின் ட்ரெய்லர் கொஞ்சமும் சலிப்புத் தட்டாமல் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் செல்கிறது. குறிப்பாக எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் எக்ஸ்பிரஷன்களும் வேற லெவலில் உள்ளது.

ட்ரென்டிங்கில் மாநாடு
ஓய் ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், பிரேம்ஜி என அனைவரும் ட்ரெயிலரிலேயே பட்டையை கிளப்பியுள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் மிரள வைத்துள்ளது. படத்தின் ட்ரெயிலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #MaanaaduTrailer என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.

ரொம்ப சந்தோஷம்
மாநாடு ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், சார்.. ரொம்ப சந்தோஷம்... திருப்தியா இருக்கு... சிம்பு மாஸ்... எஸ்ஜே சூர்யா ராக்கிங்... காத்திருக்க முடியாது.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சிம்பு நடிப்பில் சென்சேஷனல்
மற்றொரு நெட்டிசனான இவர் பல வருடங்கள் கழித்து சிம்பு நடிப்பில் சென்சேஷனல் படம் வருகிறது... யுவன் சங்கர் ராஜாவின் இசை மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

செம டஃப் கொடுக்க போறீங்க
மாநாடு ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், தீபாவளிக்கு அண்ணாத்த படத்திற்கு செம டஃப் கொடுக்க போறீங்க.
வெறித்தனமான ட்ரைலர்... எஸ்ஜே சூர்யாவோட வில்லத்தனம் + காமெடி பார்க்க ஆர்வமா இருக்கு.. சிம்பு கம் பேக் படம்.. மங்காத்தாவுக்கு பிறகு வெங்கட் சாருக்கு செம படமா இருக்க போகுது.. தீபாவளிக்கு வெயிட்டிங்... என பதிவிட்டுள்ளார்.

நைஸ் ட்ரெயிலர்
மாநாடு படத்தின் ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், மீம் மற்றும் கன்டென்ட் நிறைய இருக்கு எடுத்துக்கோங்க கிரியேட்டர்ஸ்... நைஸ் ட்ரெயிலர்.. என பதிவிட்டுள்ளார்.

ஹாலிவுட்ல அடிச்சு தொவச்ச கான்சப்ட்
மாநாடு படத்தின் ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன்,
ஹாலிவுட்ல அடிச்சு தொவச்ச கான்சப்ட் தான்.. ஆனாலும் தமிழுக்கு புதுசு.. சிம்பு ஸ்டைலிஷா இருக்காப்ல.. வெய்ட்டிங் என பதிவிட்டுள்ளார்.

பேக் கிரவுண்ட் மியூஸிக்
மற்றொரு நெட்டிசனான இவர் மாநாடு ட்ரெயிலர் குறித்து பதிவிட்டிருப்பதாவது, மாநாடு ட்ரெயிலரை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்... படத்தின் பேக் கிரவுண்ட் மியூஸிக்குக்காகவே என பதிவிட்டுள்ளார்.

யுவன் கம்பேக் அறிவிச்சிடலாமா?
மாநாடு ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், அப்புறம் என்னப்பா யுவன் கம்பேக் அறிவிச்சிடலாமா என கேட்டு யுவன் சங்கர் ராஜாவின் இசையை பாராட்டியுள்ளார்.

ட்ரெயிலர்லேயே சும்மா பின்றீங்களே
மாநாடு ட்ரெயிலரில் எஸ்ஜே சூர்யா பேசும் வசனத்தை குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் இந்த நெட்டிசன். வந்தான் சுட்டான் போனான் ரிப்பீட்டு என எஸ் ஜே சூர்யா பேசும் டயலாக்கை குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், சார் ட்ரெயிலர்லேயே சும்மா பின்றீங்களே என குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்துல் காலிக்.. சிம்புவுக்கு இது கம் பேக் என பதிவிட்டுள்ளார்.

பளபளன்னு வந்து நிக்கிறாரு
மாநாடு ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், ஆனா சிம்பு லுக்கெல்லாம் தரமான செய்கை.. எப்படி இருந்த மனுஷன் பழைய மாதிரி பளபளன்னு வந்து நிக்கிறாரு என பதிவிட்டுள்ளார்.

சீக்கிரம் பாடல்களை விடுங்க
மாநாடு ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், அண்ணா செம்மயா இருக்கு... சீக்கிரம் பாடல்களை எல்லாம் விடுங்க அண்ணா என பதிவிட்டுள்ளார்.

ட்ரேட் மார்க் மாடுலேஷன்
ட்ரெயிலரில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பை பார்த்த இந்த நெட்டிசன், சார் உங்க நடிப்பு இருக்கே... பயங்கரமா இருக்கு சார். உங்க ரெண்டு பேரோட ஃபேஸ் ஆப் கே நாங்க காத்திருக்கும் சார் என பதிவிட்டுள்ள இந்த நெட்டிசன், வந்தான் சுட்டான் போனான் ரிப்பீட்டு என எஸ் ஜே சூர்யா பேசும் டயலாக்கை குறிப்பிட்டுள்ளார். மேலும் எஸ் ஜே சூர்யாவின் ட்ரேட் மார்க் மாடுலேஷன், டயலாக் டெலிவரி எண்டெர்டெய்ன் செய்வதில் தோற்று போகாது என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











