கவிதையால் திரையுலகம் ஆண்ட சிறந்த கவிஞன்.. தமிழை பறைசாற்றிய அற்புத கவிஞன்.. நெட்டிசன்கள் புகழஞ்சலி!

சென்னை: பாடலாசிரியரும் கவிஞருமான நா முத்துக்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார் நா. முத்துக்குமார். ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.
மிகக் குறுகிய காலத்திலேயே தனது பாடல் வரிகளின் மூலம் தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்டவர் நா முத்துக்குமார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி காலமானார்.
அவரது 44வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரது கவிதையை பகிர்ந்து நா முத்துக்குமாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காற்றோடு போவோம்

உன்னோடு நானும் போகின்ற பாதை...
இது நீளாதோ தோடு வானம் போலவே...
கதை பேசிகொண்டே வா காற்றோடு போவோம்...
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்.
இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா !!!
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாத ????

என்னையும் விற்றுவிடுவார்!

தனிமையில் சந்தோசத்தில் கோபத்தில் அன்பில் அனைத்திலும் புத்தகத்தையும் வாசிப்பையும் விரும்பும் ஒருவனாய் தான் உங்களையும் உங்கள் எழுத்துகளையும்
பாக்கிறேன்... மிஸ் யூ நா முத்துக்குமார் !
'என் அப்பா
ஒரு மூட்டை புத்தகம்
கிடைப்பதாக இருந்தால்
என்னையும் விற்றுவிடுவார்!

அழியாத சோகம்

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்..!!
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்..!!
"நடைபாதை விளாக்கா காதல் விடிந்தவுடன் அணைவதற்க்கு..? நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்க்கு.
உனக்காக காத்திருப்பேன்-நா.முத்துக்குமார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வரிகள் தந்த வலிகள்!

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் ...
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்!!
வரிகள் தந்த வலிகள்!! நா.முத்துக்குமார்

பார்வையாளனை பரிசு வெல்பவனாகவும்

காலம் மைதானத்தில் விளையாடுபவனை பார்வையாளனாகவும், பார்வையாளனை பரிசு வெல்பவனாகவும் மாற்றிவிடுகிறது
நா.முத்துக்குமார்

பூனை வளர்க்கும் சுதந்திரம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறந்த கவிஞர், மனம்கவர்ந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அண்ணா!!
"புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்" -நா. முத்துக்குமார்

எங்கே காண்கிறோம்

வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நா.முத்துக்குமார்

காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்

காதல் கவிதை எழுதுகிறவர்கள்
கவிதை மட்டுமே எழுதிக்கொண்டு
இருக்கிறார்கள், அதைப் படிக்கும் பாக்கியசாலிகளே காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள்

இறக்க வேண்டும்

இறந்து போனதை அறிந்த பிறகுதான் இறக்க வேண்டும் நான்
#நா_முத்துக்குமார்

ஜனனித்த நாளின்று

கவிதையால் திரையுலகம் ஆண்ட சிறந்த கவிஞன்,
தமிழை பறைசாற்றிய அற்புத கவிஞன்,
நா.முத்துக்குமார் ஜனனித்த நாளின்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X