‘பகவந்த் கேசரி’ ரீமேக் தான் ‘ஜனநாயகன்’.. அடித்து சொல்லும் இணையவாசிகள்!
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், கவுதம் மேனன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ஜனநாயகன்'.
இப்படத்தில் இருந்து நேற்று 'தளபதி கச்சேரி' பாடல் வெளியாகி ரசிகர்கள் பாட்டை கொண்டாடி வரும்நிலையில், இப்படம் பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் என இணையவாசிகள் அடித்து கூறி வருகின்றனர்.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9ந் தேதி தியேட்டரில் வெளியாகி உள்ளது. ஜனநாயகன்' விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தில் இருந்து முதல் பாடல் நேற்று வெளியானது, அனிருத் இசையில், தெருக்குரல் அறிவு பாடல் வரியில், நடிகர் விஜய் இந்த பாடலை பாடி உள்ளார். விஜய் ரசிகர்களுக்கு ஒரு வைப் கொடுக்கும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளதால், இப்பாடல் இணையத்தில் டிரெண்டாகி உள்ளது.

பகவந்த் கேசரி படத்தின் கதை: இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படம் பாலைய்யா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என இணையவாசிகள் அடித்து கூறி வருகின்றனர். பகவந்த் கேசரி படத்தில் பாலகிருஷ்ணா காவல் துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவர் மீது பொய்யான வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறை அதிகாரியான சரத்குமார், பாலைய்யாவின் நல்ல மனதை தெரிந்து கொண்டு, அவரது தண்டனைக் காலத்தைக் குறைக்க அரசுக்குப் பரிந்துரை செய்கிறார். பாலைய்யாவிற்கு உதவிய காரணத்திற்காக அவர் தற்காலிக நீக்கமாக நீக்கப்படுகிறது. இதைதெரிந்து கொண்ட பாலைய்யா, சரத்குமாரின் வீட்டுக்கு சென்று பார்த்து பேசுகிறார்.
ரீமேக் தான்: அந்த நேரத்தில், சரத்குமாருக்கு மீண்டும் பணியில் சேரச் சொல்லி உத்தரவு வருகிறது. அதற்காக, அவர் தனது மேலதிகாரியைச் சந்திக்கச் செல்கிறார். தனது குழந்தையை பாலைய்யாவிடம் விட்டு செல்கிறார். அப்போது, சரத்குமார் விபத்தில் சிக்கி இறந்துவிட, அந்த மகளை சரத்குமாரின் ஆசைப்படி வளர்க்கிறார் பாலைய்யா. இதுதான் பகவத் கேசரி படத்தின் கதை. இந்த படத்தில் க்ளைமேக் காட்சியில் பாலையா, காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடனமாடும் பாடல் ஒன்று வரும். அதே பாடல் தான் 'தளபதி கச்சேரி' பாடலும் இருக்கிறது. மேலும், 'பகவந்த் கேசரி' படத்தில் ஸ்ரீலீலா கழுத்தை ஒட்டி பாசி ஒன்றை அணிந்திருப்பார். இதிலும், அதே மாதிரி மமிதா பைஜு அணிந்துள்ளார். இதனை வைத்து இது 'பகவந்த் கேசரி' ரீமேக்கே 'ஜனநாயகன்' என உறுதி செய்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்


Click it and Unblock the Notifications











