ஐடியா இல்லாத அல்லு அர்ஜுன்.. 300 கோடி சம்பளம் வாங்கி என்ன யூஸ்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2. இந்தப் படத்தினை சுகுமார் இயக்க, மைத்ரீ நிறுவனம் தயாரித்தது. படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் குவித்து வருகின்றது. படத்தினைப் பார்த்த ரசிகர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே, படத்தின் நீளம் குறித்து விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் படத்தைக் கொண்டாடினர். படம் தெலுங்கில் மட்டும் இல்லாமல், ஹிந்தி, மற்றும் வெளிநாடுகளில் வசூலை அள்ளி வருகின்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே, அல்லு அர்ஜுன் சம்பளம் குறித்து ஒரு பேச்சு ஓடி வருகின்றது. அதாவது, புஷ்பா 2 படத்தில் நடிக்க ரூபாய் 300 கோடிகள் சம்பளமாகப் பெற்றார் என்பதுதான் அந்த செய்தி. அது குறித்து தற்போது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் டாப் லிஸ்ட்டில் இருக்ககூடிய நடிகராக மாறிய பின்னர், அவரை உச்சத்தில் கொண்டுபோய் அமர வைத்த படம் புஷ்பா. தெலுங்கில் மற்ற நடிகர்கள் எல்லாம், இணைந்து பணியாற்றி பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் கொடுத்துக் கொண்டு இருந்த காலத்தில், அல்லு அர்ஜுன் மட்டும், புஷ்பா படத்தின் மூலம் தனி ஆளாக, சம்பவம் செய்தார். 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் அவரை பான் இந்தியா லெவலுக்கு கொண்டுபோய்விட்டது.

புஷ்பா படத்திற்குப் பின்னர், அல்லு அர்ஜுன் வேற படங்களில் கமிட் ஆகவே இல்லை. அவர், புஷ்பா 2 படத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். அதற்கு அவருக்கு பலனும் கிடைத்தது. புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் அதாவது டிசம்பர் 18ஆம் தேதியுடன் 14 நாட்கள் ஆகின்றது. இந்த 14 நாட்களில் படத்தின் வசூல் கிட்டத்தட்ட ரூபாய் 1500 கோடிகள் எனக் கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், ரசிகர்கள் மத்தியிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் ஒரு பேச்சு பரவலாக ஓடிக்கொண்டு உள்ளது.
புஷ்பா 2 சம்பளம்: அதாவது, அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் நடிக்க ரூபாய் 300 கோடிகள் வாங்கியதாக கூறப்படுகின்றது. இந்தப் பேச்சுதான் கடந்த சில மாதங்களாகவே, அதாவது புஷ்பா 2 படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் இருந்தே இது தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டே உள்ளது. இப்படியான நிலையில், அவரது சம்பளம் குறித்து ரசிகர்களும் இணையவாசிகளும் கமெண்ட் அடிப்பது மட்டும் இல்லாமல், அல்லு அர்ஜுனுக்கே ஐடியா கொடுத்து வருகின்றனர்.

கமெண்ட்: அதாவது, புஷ்பா 2 படத்தினை உருவாக்க படக்குழு மொத்தம் மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்த மூன்று ஆண்டுகளும் அல்லு அர்ஜுன் வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகவில்லை. இணையத்தில் வெளியான தகவல்களின்படி, அல்லு அர்ஜுனுக்கு ரூபாய் 300 கோடிகள் சம்பளம் என்றாலும், அதனை மூன்று ஆண்டுகளுக்குப் பிரித்தால், ஆண்டுக்கு ரூபாய் 100 கோடிகள்தான் வருகின்றது. அதற்கு பதிலாக மூன்று ஆண்டுகளில், ரூபாய் 150 கோடிகள் சம்பளத்தில் மூன்று முதல் நான்கு படங்களில் நடித்திருந்தால், அல்லு அர்ஜுன் எப்படியும், ரூபாய் 450 கோடிகள் முதல் 600 கோடிகள் வரை சம்பளமாக வாங்கியிருக்க முடியும். ஐடியா இல்லாத அல்லு அர்ஜுன் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

500 கோடிகள்: அதேநேரத்தில் புஷ்பா 2 படம் நல்ல படியாக வசூல் செய்வதால் அல்லு அர்ஜுன் தப்பித்தார். இதுவே, படம் சொதப்பியிருந்தால், என்ன ஆகியிருக்கும், அந்த நான்கு படங்களில், ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றாலும், மூன்று படங்கள் ஹிட் அடித்திருந்தால், வெற்றி சதவீதம் அதிகமாகியிருக்கும் என கமெண்ட் அடிக்கின்றனர். ஆனால் அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் மட்டும் இல்லாமல், லாபத்திலும் கணிசமான பங்கு கிடைக்கும் என கூறப்படுகின்றது. அதனைக் கணக்கில் வைத்தால், அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா 2 படம் மூலம் மொத்த வருவாய் எப்படியும் ரூபாய் 500 கோடிகளைத் தாண்டும் எனவும் ஒரு பேச்சு அடிபடுகின்றது.



Click it and Unblock the Notifications











