சைக்கிள் ஓட்டும் தல.. பெட்ரோல் விலை உயர்வுடன் முடிச்சுப் போட்டு டிரெண்ட் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தல அஜித் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள் இந்தியளவில் டிரெண்டாகி வருகின்றன.
Recommended Video

வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நொந்து போயிருந்த ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுத்துள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாகத்தான் நடிகர் அஜித் சைக்கிளுக்கு மாறிவிட்டார் என்றும் நெட்டிசன்கள் ட்வீட் போட்டு ரகளை செய்து வருகின்றனர்.

30 ஆயிரம் கிலோ மீட்டர்
நடிகர் அஜித் கடந்த 15 வருடங்களாக சைக்கிள் ஓட்டி வருவதாகவும், இந்தியா முழுவதும் ஏகப்பட்ட நகரங்களை சைக்கிளிலேயே சுற்றி உள்ளார் என்றும் இதுவரை 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை நடிகர் அஜித் கடந்துள்ள ரகசியத்தையும் அவரது நெருங்கிய நண்பர் தற்போது வெளியிட்டுள்ளார்.

10 ஆயிரம் கிலோ மீட்டர்
அதே போல பைக்கில் இந்தியா முழுவதும் 10 ஆயிரம் கிலோ மீட்டர்களை நடிகர் அஜித் கடந்துள்ளார் என்றும், பைக், கார் மற்றும் சைக்கிளிங் என அனைத்துமே நடிகர் அஜித்தின் பேஷன் தான் என்றும் அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்துள்ளார். தற்போது வைரலாகி வரும் நடிகர் அஜித்தின் சைக்கிளிங் புகைப்படங்களை மற்றொரு பெரிய பிரச்சனையுடன் நெட்டிசன்கள் முடிச்சுப் போட்டு வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை
சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏகப்பட்ட போராட்டங்களும் சமூக வலைதளங்களில் மீம்களும் டிரெண்டாகி வருகின்றன. மம்தா பானர்ஜி எலக்ட்ரிக் பைக்கில் சென்று விலை உயர்வை கண்டித்துள்ள நிலையில், தல அஜித் அதன் காரணமாகத்தான் சைக்கிள் ஓட்டுகிறார் என்றும் நெட்டிசன்கள் முடிச்சுப் போட்டு வருகின்றனர்.

பெட்ரோல் உயர்வை கண்டித்து
பெட்ரோல், டீசல் விலை ஏறிய காரணத்தினால் இனி நடிகர் அஜித் குமார், பைக் மற்றும் காருக்கு பதிலாக சைக்கிள் தான் ஓட்டுவார் என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து சைக்கிள் போராட்டம் நடத்தினார் அஜித் என்றும் வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.

விமர்சனத்திற்கு பதிலடி
வீட்டை விட்டு வர மாட்டேன் என்கிற டி-சர்ட் புகைப்படத்தை வெளியிட்டு தல அஜித்தை ட்ரோல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் தல அஜித் என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரீல் மற்றும் ரியல் லைஃப் இரண்டையுமே சரியாக கையாள தெரிந்த நபராக அஜித் எப்போதுமே கெத்து காட்டுகிறார்.
டயர் ஓட்டினாரே
சைக்கிள், பைக், கார், ட்ரோன், ஹெலிகாப்டர் எல்லாம் பெருசு இல்லைங்க, தனது மகள் அனோஷ்காவின் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான நிகழ்ச்சியில் சாதாரண தந்தையாக கலந்து கொண்டு டயர் ஓட்டினாரே, அது தாங்க எங்க தல என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











